பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - நாலடியார்-தெளிவுரை

என்று எண்ணி, அணுவளவும் நிலையில்லாத அந்தச் செல்வத்தை விரும்பினாய். நாம் இறந்து போவோம் என்று எள்ளளவும் நினையாமற் போயினாய். சிறிது பொழுதும் ஒய்வில்லாமல், நிலையாக அந்தச் செல்வத்தைச் சம்பாதிக்கப் பலவாறெல்லாம் முயன்று நீ வாழ்வாய் என்றபோதும், நின் வாழ்நாட்கள் கழிந்து போயின. இனிச் செய்வதைச் சொல்வாயாக! -

உள்ள நாளெல்லாம் பொருள் தேடுவதிலேயே ஈடுபட்ட ஒருவன் தன் சாவுப் படுக்கையிலே கிடந்து தன் நெஞ்சை நோக்கிப் புலம்புவதாக அமைந்தது இது. அறநெறியினைக் காலங்கடத்தாமல் செய்ய வேண்டும்; இன்றேல் இப்படித்தான் வருத்தம் அடைய நேரும் என்று காட்டுவது இது. நசைஇ, விரும்பி, புலை - கீழான, ஒவாது இடையறாது. நின்று - பொருள் ஆர்வத்திலேயே நிலைபெற்று. உஞற்றி - முயற்சி செய்து.

33 வினைப்பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,

மனத்தின் அழியுமாம், பேதை - நினைத்ததனைத்

தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து

எல்லை இகந்தொருவு வார்.

பழவினையானது வந்து சம்பவித்த காலத்திலே அறிவீனன், கடுமையாகப் பெருமூச்சு விட்டவனாகத், தன் மனத்திலே அதனையே நினைந்து நினைந்து தளர்ந்து போவான். அந்தத் தீவினைப் பயனை ஆராய்ந்து, அது முற்பிறப்பின் அறக்கேட்டால் வந்து சம்பவித்தது என்று உணர்பவர்களே, பிறவித் துயரின் எல்லையை விட்டு நீங்கிப் பேரின்ப நிலையை அடைவார்கள்.

விவேகம் அற்றவர் பழவினையை நினைந்து வருந்துவார்; உள்ளவர் வருந்தார் என்றதால், விவேகமுங்கூட அறவினைப் பயனாலேயே வருவதாகும் என்றனர். தடுமாற்றம் - பிறவித் துயரால் உயிர் சுழன்று படும் வேதனைகள். இகந்து கடந்து.

34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,

பெரும் பயனும் ஆற்றவே கொள்க! - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி, மற்றதன் கோதுபோற் போகும் உடம்பு!

அருமையாகவே பெறுதலையுடையது உடல், அந்த உடலினைப் பெற்றதன் பயனாக, உயிருக்குப் பெரும் பயனாக