பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - நாலடியார்-தெளிவுரை

இன்றைக்கோ, அன்றைக்கோ, என்றைக்கோ என்று எல்லாம் நினையாமல், கூற்றமானது உயிரைக் கொள்ளும் பொருட்டாக நம் பின்னேயே வந்து உரிய சமயத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றது. இங்ஙனம் உண்மையை நினைந்து, தீய செயல்களிலே ஈடுபடுவதை உடனேயே விட்டுவிடுங்கள். மாட்சிமையுடைய சான்றோர்கள் கடைப்பிடித்த தரும மார்க்கத்தில் உங்களால் முடிந்த வகைகளில் எல்லாம்

உடனேயே ஈடுபடுங்கள்.

ஒல்லும் வகையால் தருமம், பொருளுள்ள அளவிற்கு ஏற்பவும், துறவறம் உடலின் நிலைக்கு ஏற்பவும் செய்தல் ‘ஆயுள் நிலையல்லவென்பதை உணர்ந்து, தீய செயல்களை விலக்கிச் சான்றோர் கடைப்பிடித்த அறவழிகளிலே உள்ளத்தைச் செலுத்திச் செயல்படவேண்டும் என்பது கருத்து.

37. மக்களால் ஆய பெரும்பயனும், ஆயுங்கால், எத்துணையும் ஆற்றப் பலவானால்,-தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது, உம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். மக்களாக உடலெடுத்துப் பிறந்ததனால் செய்யத்தக்க பெருமையாகிய பயன்களும் ஆராயுங்காலத்தே. எவ்வளவினும் மிகவும் பலவாகும். ஆதலினாலே, நரம்பு தசை முதலியவை சேர்ந்த உடலின் நன்மைக்காகவே, உபயோகமான செயல் களைச் செய்து நடவாமல், மேலுலகத்திலே இருந்து அநுபவிக்கும்படியான பேரின்பத்தைக் கருதி, அதனைத் தருகின்ற அறவழியிலேயே அனைவரும் செயற்பட வேண்டும்.

‘மக்கள்’ என்றது, மனித உடம்பை. உடலினாற் செய்யும் நற்காரியங்கள் பலவிருக்கவும், அவற்றைச் செய்யாமல் உடலிச்சைகளிலேயே மனஞ்செலுத்துவது கூடாது; மறுமைக்கான முயற்சிகளிலே ஈடுபட வேண்டும் என்பது கருத்து. தொக்க-தொகுத்த ஒப்புரவு-உபகாரம்; நன்மை தரும் செயல். உம்பர்-மேலுலகம்; சுவர்க்கம்.

38. உறக்குந் துணையதோர் ஆலம்வித்து ஈண்டி

இறப்ப நிழற்பயந் தாஅங்கு-அறப்பயனும் தான்சிறி தாயினும், தக்கார்கைப் பட்டக்கால், வான்சிறிதாப் போர்த்து விடும். மிகமிகச் சிறு அளவினதாகிய ஓர் ஆலம் விதையானது முளைத்துக் கிளைகள் நெருங்கி, மிகவும் நிழல்தந்து பெரிய