பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாலடியார்-தெளிவுரை

‘எவ்வளவுதான் ஊட்டிப் பேணினாலும் உடல் நிலையற்றது; ஆதலால், அதனை நிலைக்கச் செய்யக் கருதி மானங்கெட்ட செயல்களிலே எவரும் ஈடுபடுதல் கூடாது; அதனை ஒறுத்து அறநெறிகளிலே உறுதியுடன் ஈடுபடுதல் வேண்டும் என்பது கருத்து. இரவு-இரத்தல். இளிவு - தாழ்ச்சி. 5. தூய்து அன்மை

‘ஊத்தைச் சடலமடி உப்பிட்ட பாண்டமடி என்று, உடலின் தன்மையைக் குறித்துப் பெரியோர்கள் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்கள். என்றாலும் உடலின் கவர்ச்சியிலே மயங்குபவர்கள்தாம் மக்களுள் பெரும்பாலர். இம்மை இன்பத்திற்கு ஆதாரமான உடலின் அழகுக்குப் பூச்சுக்களாலும் புனைவுகளாலும் மேலும் மேலும் அழகுபடுத்திக் களிக்கவும் அவர்கள் தவறுவதில்லை.

தூய்மையான அறநெறியிலே மனிதரைச் செல்வதற்கு விடாது, மயக்கும் இந்த உடற்கவர்ச்சியின் காரணமாக, ஒழுக்கநெறி குன்றிப் போவதனால், அதனைப் பற்றி. அதன் தூய்மையற்ற தன்மையைப்பற்றி ஆராய்கிறது இப்பகுதி.

இதன்கண், பெரும்பாலும் அழகு உடலினர் என்று சுட்டப்படும், பொருட் பெண்டிரின் உடற்கவர்ச்சி பற்றியே பேசப்படுகிறது. அதன்பால் மயங்கிக் காமவசத்தராகி, நன்னெறி பிறழ்ந்து நலியாமல், துறவுநெறி மேற்கொண்டு, உயிருக்குத் திண்மையளிக்கும் நிலையான முயற்சிகளிலே ஈடுபடுதல் வேண்டும் என்பது இந்தப் பகுதியின் கருத்தாகும்.

41. ‘மாக்கேழ் மடநல்லாய்’ என்றரற்றுஞ் சான்றவர்

நோக்கார்கொல், நொய்யதோர் புக்கில்லை?

யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும், வேண்டுமே, காக்கை கடிவதோர் கோல்! -

“மாந்தளிர் போன்ற மேனி நிறத்தினையும், இளமைப் பருவத்தினையும் உடைய பெண்ணே! என்று வாய்விட்டுப் போற்றுகின்ற பெரிய மனிதர்கள், அற்பமான ஒரு புகத்தக்க வீடு அது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்களோ? அப்படி அவர்களால் புகழப்பட்ட அழகிய உடலிலே, ஈயின் சிறகின் அளவான ஒரு தோற்பகுதியானது அறுபட்டுப் போனாலும், அந்தப் புண்ணைக் குத்துதற்கு வருகின்ற காக்கையை ஒட்டுவதற்கு, ஒரு கொம்பே துணையாக வேண்டியதிருக்குமே!