பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 31

பேச்சுக்கள் என்னைக் கவலைப்படுத்துமாறு, யான் என் துறவு

ஒழுக்கத்தைக் கைவிட்டு விடுவேனோ?

‘கண்பார்வைக்கும் மனந்தளரேன்’ என்றது முன் பாடல். இதன் கண், முறுவல் கண்டும் மனந்தளரேன்’ என்பது! கூறப்பட்டது பல்லென்பு - பற்களாகிய எலும்புகள்.

46. குடரும், கொழுவும், குருதியும், என்பும்,

தொடரும் நரம்பொடு தோலும், - இடையிடையே வைத்த தடியும், வழும்புமாம், மற்றிவற்றுள் o எத்திறத்தாள், ஈர்ங்கோதை யாள்?

குடரும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கிறதான நரம்பும், தோலும், இவற்றின் இடையிடையே வைத்திருக்கின்ற தசையும் நிணமும் ஆகிய உடலின் இத்தகைய பல்வேறு பகுதிகளுள், குளிர்ச்சியான தலைமாலையை உடைய பெண்’ என்று சொல்லப் படுபவள்தான், எந்தப் பகுதியைச் சார்ந்தவளோ?

‘தனித்தனியாகப் பார்த்தால் எல்லாம் அசுத்தமானவை களாயிருக்கின்றனவே? இவை சேர்ந்த பெண் என்பவள் மீது உண்மையறிந்தார் காமுற்று அலைவது அறிவீனம் அல்லவோ? என்று சொல்லித் துறவை வற்புறுத்துவது இது. வழும்பு நிணம். தடி தசை. -

47. ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்

கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப்,-பேதை, ‘பெருந்தோளி பெய்வளாய்’ என்னும், மீப் போர்த்த கருந்தோலாற் கண்விளக்கப் பட்டு.

மலங்களால் ஊறி, வெறுக்கத்தக்கதாக விளங்கும் ஒன்பது துவாரங்களாகிய புலன்களும் அசுத்தக் குழம்புகளைச் சிதறிச்சிதறி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உடலாகிய அசுத்தப் பாண்டத்தைப் பேதையாள்!’ எனவும், ‘பெருந் தோளினாள் எனவும், இடப்பட்ட வளையல்களை உடையவளே’ எனவும், அதன்மீது போர்த்திருக்கிற அழகான தோலினால், கண்களுக்கு ஒளிபெறும் படி மயக்கஞ் செய்யப்பட்டு, அறிவற்றோர் போற்றுவார்கள்.

‘அறிவுடையோர் அதனை வெறுத்து, உயிர்க்கு உறுதி தருகின்ற அறவழியாகிய துறவுநெறியிலே மனஞ் செலுத்து

வார்கள்’ என்பது கருத்து. கும்பம்-பாண்டம். கருந்தோல்அழகிய தோல்.