பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாலடியார்-தெளிவுரை

48. பண்டம் அறியார், படுசாந்தும் கோதையும்

கண்டு, பாராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும் முடைச்சாகா டச்சிற் றுழி? - உடலாகிய பண்டத்தினது அசுத்தமான தன்மையை அற்ப அறிவினர் ஒருபோதும் அறியமாட்டார்கள். பூசுவதற்குத் தகுதியான சந்தனத்தைப் பூசிக்கொண்டும், தலையிலே பூமாலையைச் சூடிக் கொண்டும் விளங்கும் அதனைப் போற்றிப் பாராட்டுவார்கள். பெட்டையும் ஆணும் ஆகிய வன்மையான கழுகுகள் திரண்டு கூடிப் பெயர்த்துப் பெயர்த்துக் குத்துகின்ற, முடை நாற்றம் உடைய வண்டியாகிய உடம்பின் அச்சாகிய உயிர் அற்றுப் போகின்ற தன்மையைக் கண்டும் இவர்கள் உண்மையை அறியார்களோ?

‘உயிரற்ற உடலைக் கழுகுகள் கூடிக் குத்தியுண்பதை அறிந்தும் மனிதர்கள் அதைப் பாராட்டுகின்றார்களே? அவர்கள் அதன் அசுத்தத் தன்மையை உணர்ந்து துறவு பூணமாட்டார்களோ? என்பது இது. மண்டுதல்-திரண்டு சேர்தல். முடைமுடை நாற்றம். சாகாடு-வண்டி

49. கழிந்தார் இடுதலை, கண்டார் நெஞ்சு உட்கக்,

குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி,-ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின்; இற்றிதன் பண்பு’ என்று .சாற்றுங்கொல், சாலச் சிரித்து. சுடுகாட்டிலே கிடக்கின்ற இறந்தவர்களுடைய தலையோடானது, தன்னைக் கண்டவர் நெஞ்சம் அச்சங் கொள்ளும்படியாகப் பள்ளமாகிக் குழிந்திருக்கிற கண்களை உடையதாகத் தோன்றி, “உடலின்கண் பற்று ஒழித்த சான்றோரைப் போற்றி அவர்கள் நின்ற நெறியிலேயே நில்லுங்கள்; இவ்வுடம்பின் குணம் இறுதியில் இப்படிப் பட்டதுதான்” என, மிகவுஞ் சிரித்துச் சொல்லும் போலும்!

அத்தலையோட்டைக் காண்பவர்கள், உடலின் தூய்து அன்மையை உணர்ந்து நெறிப்படுதல் கூடுமாதலால், ‘அது சொல்லும் போலும் என்றனர். கழிந்தார்-இறந்தார். இற்று இதன் பண்பு.இதன் பண்பு இத்தன்மையானது.

50. உயிர்போயார் வெண்தலை உட்கச் சிரித்துச்,

செயிர்தீர்க்கும், செம்மாப் பவரைச்-செயிர்தீர்ந்தார்