பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - - 35

பருவம், அந்தப் பருவத்திலே காணப்படும் பருவ இயல்பான

மிகுந்த அழகு, சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, பல்வகைச்

செல்வங்கள் உடலின் வலிமை எனப்படுகின்ற இவைகள். எல்லாம் நிலைத்திராமையை அமைதியாக ஆராய்ந்து பார்த்து, மேலோர்கள், தாங்கள் பிறவித் துன்பங்களினின்றும் கடைத்

தேறுவதற்கான வழிகளை மேற்கொள்ளுதலில் காலத்தை

நீட்டியாதவராக, இளமையிலேயே உலகப் பற்றினை துறந்து

விடுவார்கள்.

மீக்கூற்றம்-மேலான சொல்; செல்வாக்கு. மெல்லஅமைதியாக அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வாரார் என்க. ‘இவற்றினிடத்தெல்லாம் மனம் பற்றுக் கொள்ளுங் காலத்து, மெல்ல ஆராய்ந்து, அவற்றைத் துறந்து, உறுதிப் பொருள் களிலே நாட்டஞ் செலுத்துபவரே மேலோர்’ என்பது கருத்து.

54. துன்பம் பலநாள் உழந்தும், ஒருநாளை

இன்பமே காமுறுவர், ஏழையார்; -இன்பம் இடைதெரிந்து, இன்னாமை நோக்கி, மனையாறு அடைவொழிந்தார், ஆன்றமைந் தார். அறிவில்லாதவர்கள் பற்பல நாட்களினும் துன்பத்திலேயே கிடந்து வருந்தியபோதிலும், ஒரு நாளைக்குக் கிடைக்கும் இன்பத்தையே பெரிதாக மதித்து விரும்புவார்கள். அறிவினால் மிகுந்து அதற்கேற்ப அடங்கியவராக விளங்கும் சான்றோரோ, இன்பமானது அடிக்கடி மாறுபடுவதைத் தெரிந்தவர்களாகி, அதனால் மேல்வரும் துன்பத்தையும் அறிந்து, இல்வாழ்க்கை நெறியிலே செல்லுதலினின்றும் அறவே நீங்கினவர்களாக இருப்பார்கள்.

‘இல்வாழ்விலே பலப்பல துன்பங்கள் நேர்வது கண் கூடு; ஆயினும் ஒரோரு சமயத்துப் பெறும் இன்பத்திற்காக அதனை விரும்புவார்கள் பலர். ஆனால் அறிவு உடையவரோ, இன்பம் நிலையில்லாது மாறிப்போவதையும், துன்பமே வாழ்வில் மிகுதியாவதையும் அறிந்து அதனை மேற்கொள்ளார்’ என்பது கருத்து மனையாறு இல்வாழ்வு. அடைவு அடைதல். இடை மாறுபடுதல்; இடையீடுபடுதல். அறிவே உண்மைச் செல்வம்: ஆதலால், அஃதற்றோர் ஏழையர் ஆயினர்.

55. கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே

பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவொன்றி என்னொடு சூழாது, எழுநெஞ்சே! போதியோ, நன்னெறி சேர, நமக்கு?