பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 37

அரிய துன்பங்கள் வந்து தம்மைச் சேர்ந்த காலத்திலும் அவற்றை ஒதுக்கித் தம் நோன்புகளிலேயே மனத்தை உறுதிப்படுத்துகின்ற உள்ளத் திண்மையினை உடையவர்களே, உயிருக்கு நிலைத்த நன்மையைத் தருவதான துறவு ஒழுக்கத்தைப் பேணும்படியான சிறப்பினை உடையவர்கள் ஆவார்கள்; பிறர் அங்ஙனம் ஆகார்.

‘தவநெறி மேற்கொண்டாலும் இடையே மனத்தைச் சஞ்சலங்களிலே உழலவிடாமல் உறுதியுடன் விளங்க வேண்டும். அப்படி உறுதி உடையவரே உண்மைத் துறவியர்’ என்பது கருத்து. உரவு-வலிமை. திருவத்தவர்-சிறப்பினை உடையவர்.

58. தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, மற்று

எம்மை இகழ்ந்த வினைப்பயத்தான்,-உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்’ என்று பரிவது.உம், சான்றோர் கடன்.

ஒரு கேடுஞ் செய்யாத தம்மை, அறிவற்ற பேதை மாக்கள் இகழ்ந்தால், அதைத் தாம் பொறுத்துக் கொள்வதும் அல்லாமல், எம்மை இப்படி இகழ்ந்து பேசிய தீவினையின் பயனால், இவர்கள் மறுமையில் தீநிரம்பிய நரகத்திலே வீழ்வார்களே? என்று, அவர்களுக்காக இரக்கப்படுவதும், துறவினால் சான்றாண்மை உடையவராக விளங்குபவரின் கடமையாகும்.

‘தமக்குத் துன்பம் இழைத்தவருக்கும், அதனால் துன்பம் நேரிடக் கூடாது என்று எண்ணுகின்ற இரக்கம் உடைமையே உண்மைத் துறவியரின் இலக்கணம்’ என்பது கருத்து. உம்மை மறுமை. பரிவு-இரக்கம். எரிவாய் நரகம்-வெவ்வழல் உடைய நரகம.

59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக்,-கைவாய், கலங்காமற் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காது வீடு பெறும். ‘மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் பெயர் கொண்ட ஐந்து புலன்களின் வழியாக எழுகின்ற வேட்கை என்னும் ஆசையினை, அதனால் தன் மனம் கலங்காமற் காத்துக் கொண்டவனாகத் துறவு ஒழுக்கத்திலே அந்த மனத்தைச் செலுத்துகின்ற ஆற்றல் உடையவன் எவனோ அவன் தப்பாமல் வீட்டின்பத்தைப் பெற்று விடுவான்.