பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் . - 39

துறவறத்தாருக்குப் போலவே இல்லறத்தாருக்கும் இது இன்றியமையாத பண்பாகும். சிறு சினமும், அதனைத் தொடர்ந்து வரும் பகைமை உணர்ச்சியும் எவ்வளவோ தீமைகளுக்கெல்லாம் காரணமாகிவிடுவதை நாம் கண்கூடாகக் காணலாம் அல்லவோ,

61. மதித்துஇறப் பாரும் இறக்க மதியார்,

மிதித்துஇறப் பாரும் இறக்க! -மிதித்தேறி, ஈயுந் தலைமேல் இருத்தலால், அஃதறிவார் காயும் கதமின்மை நன்று.

தம்மை மேன்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார் களாக, தம்மை மதியாமல் கீழ்மைப்படுத்திச் செல்பவர்களும் செல்வார்களாக மிகவும் இழிவான ஈயுங்கூட தம் தலைமேல் மதித்து ஏறிவந்து இருப்பதனால், அதனை அறிந்தவர்கள், பிறரையும் தம்மையும் சுட்டுப் பொசுக்கும் சினத்தைக் கொள்ளாதவராக இருப்பதே, மிகவும் நன்மை தருவதாகும்.

“உயர்ந்தோர் எவரையும் மதிப்பார்கள்; இழிந்தோர் சான்றோரையும் அவமதிப்பார்கள்; அதனால் இப்படி அவமதிப்போரைத் தலைமேல் ஏறி அமர்கின்ற ஈயைப் போலக் கருதிப் பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும்; அவர்மேற் சினங்கொள்ளல் கூடாது’ என்பது கருத்து.

62. தண்டாச் சிறப்பிற்றம் இன்னுயிரைத் தாங்காது,

கண்டுழி எல்லாம் துறப்பவோ, மண்டி, அடிபெயராது, ஆற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர்?

வைத்த காலைப் பெயர்த்து எடுத்துவைக்கவும் முடியாதபடி பெரிய அவமதிப்பு இடைவிடாது நெருங்கி வந்த போதிலும், அதற்கும் உள்ளங் கலங்காது, தாம் மேற்கொண்ட செயலை நிறைவேற்றும்படியான மனவுறுதி கொண்டவர்கள், சிறந்தவர்கள். அவர்கள் நீங்காத சிறப்பினையுடைய தமது இனிதான உயிரைப் பேணித் தாங்குவதற்கு நினையாமல், கண்டவற்றில் எல்லாம் செல்லவிட்டு, அதனை விட்டுவிட

என்றாவது நினைப்பார்களோ?

பிறர், தமக்குச் சினமுண்டாகச் செய்வதற்க்ாகச் சினங்கொண்டு உயிரைவிடும் அறியாமை உடையவரைக் குறித்துச் சொல்லியது இது. ‘சான்றோர் அவ்வாறு உயிரைச் சிதறவிடாமல் அமைதியாக இருப்பர்’ என்பது கருத்து.தண்டாச் சிறப்பு - நீங்காத சிறப்பு. துறத்தல் - இழத்தல்.