பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாலடியார்-தெளிவுரை

63 காவாது, ஒருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்

ஒவாதே தன்னைச் சுடுதலால், ஒவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார், எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார், கருத்து. பிறன் ஒருவன் தன் வாயைக் காத்துக் கொள்ளாமல், அதனைத் திறந்து சொல்லும் கடுஞ்சொல்லானது, ஒய்வில்லாமல் தம்மைச் சுட்டு வருத்துதலால், ஒழிவில்லாமல் மெய்ப்பொருள்களை ஆராய்ந்து நிரம்பிய கேள்வியைப் பெற்ற அறிவுடையவர்கள், எப்போதும் பிறரைக் கோபித்துக் கடுமையான சொற்களைத் தாம் சொல்லவே மாட்டார்கள்.

‘பிறருடைய கடுஞ்சொற்களால் படுகின்ற வேதனையை மனத்துட் கொண்டு, பிறர்பால் அத்தகைய கடுஞ்சொற்களைத் தாம் ஒருபோதும் கூறமாட்டார்கள் சான்றோர்கள் என்பது கருத்து. கறுத்து-சினந்து.

64. நேர்த்து நிகர் அல்லார் நீர்அல்ல சொல்லியக்கால்

வேர்த்து வெகுளார், விழுமியோர்,-ஒர்த்ததனை, உள்ளத்தான் உள்ளி, உரைத்துராய், ஊர்கேட்பத் துள்ளித் தூண் முட்டுமாம், கீழ்.

தமக்கு ஒப்புமை இல்லாதவர்கள், தம்மை எதிர்த்துத் தகுதியற்ற சொற்களைச் சொல்லிய காலத்தும், அதனைக் கேட்டு மனம் புழுங்கிச் சினங்கொள்ள மாட்டார்கள் மேலானவர்கள். கீழ்மக்களோ, அந்தச் சொற்களை நன்றாக ஆராய்ந்து, தம் உள்ளத்தினால் நினைந்து, பலரும் கேட்ப அவர்க்குச் சொல்லி, ஊரெல்லாம் கேட்கும்படி உராய்ந்து துள்ளிக்குதித்துத், தூணிலேயும் போய் முட்டிக் கொள்வார்கள்.

‘அற்பர் செய்யும் நிந்தனைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள் பெரியோர்கள். கீழ்மக்களோ, “அவன் அப்படிச் சொல்லலாயிற்றா’ என உள்ளங்கொதித்துப், பலருக்குஞ் சொல்லித் தமக்கே அதிகமான இழிவைத் தேடிக் கொள்வார்கள் என்பது கருத்து, ‘ஊர் கேட்ப என்பது, இவன் துள்ளலும் உராய்தலும் தூண்முட்டலும் கண்டு ஊரார் வந்து என்னவென்று கேட்க எனவும் பொருள்படும்.

65. இளையான் அடக்கம் அடக்கம், கிளை பொருள் இல்லான் கொடையே கொடைப்பயன்;-எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை.