பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

நாலடியார்-தெளிவுரை





இல்வாழ்வின்கண் இன்பம் நிலவுவது போலவே துன்பங்களும் மிகுதியாக விளங்குகின்றன. அவற்றால், உள்ளம் சோர்வு கொண்டு விடாமல் உறுதியுடன் ஒழுக்க நெறி நின்று பேணிவருதல் வேண்டும். அப்படிப் பேணுவதே இல்லற நெறியைச் செம்மையுடன் பின்பற்றுவதாகும்.

8. பொறை உடைமை

பொறை உடைமையாவது - பொறுமை உடையவராக விளங்குதல். இல்வாழ்வு தன்வீடு, தன் பொருள், தன் வாழ்வு என்ற புறப்பற்றினாலும், எனது என்னும் அகப்பற்றினாலும் நிலைபெறுவது. இந்தப் பற்றுக்கள் அளவுகடந்து போய் விடாமல் முறையோடு எங்கும் சென்று கொண்டிருக்கும் வரையிலே எவ்வகைத் தீங்கும் ஏற்படாது.

ஆனால், காரணம் பற்றியாவது, அல்லது அறியாமை பற்றியாவது தம்முடன் கலந்தவர் செய்த பிழையைப் பொறுத்து, இல்வாழ்வுப் பிணைப்பை நெகிழவிடாமல் பேணிக்கொள்ள வேண்டிய கடமையை எவரும் மறந்து விடக்கூடாது. அறியாமை வயப்பட்ட உயிர்களாதலால், பொறுமையிழக்க நேர்கின்ற சந்தர்ப்பங்களும் பலவாகலாம். பொறுமை இழந்தால் வரும் தீமைகளை உளங்கொண்டு பொறுமையோடிருக்க வேண்டும் என்பதை வற்புறுத்துவது இந்தப் பகுதி.

சினம், பொதுவாக அயலார் பற்றியும், பொறுமை இன்மை கலந்தார் பற்றியும் ஏற்படுவது என்ற வேறுபாட்டை அறிந்து இதனைப் படிக்கவேண்டும்.

71. கோதை அருவிக் குளிர்வரை நன்னாட!

பேதையோ டியாதும் உரையற்க! -பேதை, உரைக்கிற், சிதைந்துரைக்கும்; ஒல்லும் வகையான், வழுக்கிக் கழிதலே நன்று.

மாலையினைப் போன்ற தோற்றத்துடன் வீழ்கின்ற அருவிகளை உடைய, குளிர்ச்சி பொருந்திய மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! அறிவில்லாத பேதைமாக்களோடு எதனையும் எப்போதும் சொல்லாதிருப்பாயாக. அந்தப் பேதை எதையாவது சொல்வதென்றால் சொற்பொருள்களின் வரம்புகள் சிதைந்ததாகவே பேசுவான். கூடுமான வகையிலே எல்லாம் அத்தகையவரைத் தப்பி, அவர்களுடைய தொடர்பு களின்றும் நீங்குதலே நினக்கு நன்மை தருவதாகும்.