பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 45

பேதை சொல்லாற்றலையும், சொற்பொருளையும் உணராதவன், அவன்வழி அனுப்புஞ் செய்திகளைத் தவறாக அவன் சென்று உரைக்க, அதனாற் காரியம் கெட, உன்னிடம் எழும் சினத்தையும் அவமானத்துக்கு அஞ்சிப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கும். ஆகவே அத்தகையாரின் தொடர்பையே கைவிடுதல் நல்லது என்பது கருத்து.

72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால், மற்றது

தாரித்திருத்தல் தகுதி, மற்று-ஒரும் புகழ்மையாக் கொள்ளாது, பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும்.

நேர்மையான பண்பு அற்றவர்களாகிய கீழோர்கள், பண்பற்ற இழிந்த சொற்களைத் தம்மைக்குறித்துச் சொல்லிய காலத்திலும், அதனைப் பாராட்டாது பொறுத்திருப்பதே அறிவுடையோரின் தகுதியுடைமையாகும். அதற்கு மாறுபட்ட தாகிய பொறுமையின்மையை, மிக்க நீர்ப்பெருக்கையுடைய கடலாற் சூழப்பட்ட பூமியிலுள்ள உயர்ந்தவர்கள், புகழுக்குக் காரணமாகக் கொள்ளாது, பழித்தற்குக் காரணமாகவே எண்ணித் தம்மிடத்தினின்றும் நீக்கிவிடுவார்கள்.

‘சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே’ என்பது இது. புகழ்மைக்கு எதிர்ப்பதம் சமழ்மை. நேர் அல்லார் - தமக்குச் சமம் இல்லாதவரும் ஆம் தாரித்தல் - பொறுத்தல்.

73. காதலார் சொல்லும் கடுஞ்சொல், உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம் மாதர்வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப! ஆவ தறிவார்ப் பெறின்? பூக்களிலே எல்லாம் அழகிய வண்டினங்கள் மொய்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற, நிறைந்த கடலினது குளிர்ச்சியான கடற்கரையினையுடைய நாட்டின் தலைவனே! தமக்கு நன்மையாவது எதுவென ஆராய்ந்து அறிபவரைப் பெற்றால், தம்மிடத்து அன்பு உடையவர் சொல்லும் கடுமையான சொற்கள் தம்பால் உவப்புடன் சொல்லுகின்ற அயலாரின் இனிய சொற்களைவிடத் தீதாகுமோ?

‘பகுத்தறிவு உடையவர்கட்கு அன்புடையவர் கூறும் கடுஞ்சொல்லே, அயலார் கூறும் இன்சொல்லினும் விருப்பந்தருவதாயிருக்கும்’ என்பது கருத்து. அதனைப்