பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாலடியார்-தெளிவுரை

கும்பி-நரகம். நம்பற்க-விரும்பற்க கூர்த்த மிகுதியான. “நாணுடையார் நம்பற்க. எனவே, நம்புவோர் நாணம் அற்றவர் என்றனர்.

82. அறம், புகழ், கேண்மை, பெருமை, இந் நான்கும் பிறன்தாரம் நச்சு வார்ச் சேரா, - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும், பகைபழி பாவமென்று அச்சத்தோ டிந்நாற் பொருள். அயலானது மனைவியை விரும்புகிறவர்களைப் பகையும், பழியும், பாவமும், அச்சமும் ஆகிய நான்கு பொருள்களுமே சென்று அடையும். அறம், புகழ், நட்பு, பெருமை ஆகிய நான்கு பொருள்களும் பிறன்மனைவியை விரும்பிச் செல்கின்ற வனிடத்திலே ஒரு நாளும் சென்று அடையா.

அப்பெண்ணைச் சார்ந்தவர் மட்டுமல்லாமல், அச்செயலைக் கேட்ட எவரும் பகைவராவராதலால் அறம், புகழ், கேண்மை, பெருமை என்பவை எல்லாம் இல்லாமற்போம் என்று அறிக. அச்சம், தன்னுள் எழுவது; பகை, அவள் இல்லத்தார் கொள்வது; பழி, ஊரில் எழுவது; பாவம், மறுமையில் வந்து பற்றும் தீவினைப் பயன்.

83. புக்கவிடத்து அச்சம், போதரும் போதச்சம்,

துய்க்கும் இடத்தச்சம், தோன்றாமற் காப்பச்சம்; எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ, உட்கான், பிறனின் புகல்? பிறனுடைய மனைவியை அடைய விரும்பி, அவ்ளிருக்கும் இடத்தை நாடிப் போகும்பொழுது அச்சம் ஏற்படுகின்றது. போய்த் திரும்புபொழுதும் அச்சம் ஏற்படு கின்றது. அவளுடன் கூடி அநுபவிக்கும்போதும் அச்சம் ஏற்படு கின்றது. அந்த உறவு வெளியே தோன்றி விடாமற் காப்பதிலும் அச்சம் ஏற்படுகின்றது. இவ்வாறு எப்போதும் அச்சமே தருவதாயிருந்தும், ஒருவன், பிறன் மனையாளை விரும்பிப் போவதற்கு ஏன் பயப்படமாட்டேன் என்கிறான்?

பிறன் மனை நயப்பவன் கொள்ளும் அச்சமிகுதி கூறி, அதனை நயவாமை இதன்கண் வலியுறுத்தப்பட்டது. உட்குதல்அஞ்சுதல்.

84. காணிற் குடிப்பழியாம், கையுறிற், கால்குறையும்; மாணின்மை செய்யுங்கால், அச்சமாம்;-நீணிரயத்