பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 53

சென்று நிற்காமலும், வேறானவர்களிடத்து வெட்கப்படுதலை அஞ்சியும், ஒன்றும் சொல்லாதும், அவரது உள்ளத்தின் உள்ளேயே அடங்கிப் போய்விடும் இயல்பினைக் கொண்டது என்பதனால், -

அறிவுடையாரும் வினைவசத்தால் பிறர் மனைவியர் பால் காம வசப்பட நேரலாம்; நேரினும், அவர் அதற்குத் தாம் இரையாகாமல், அதனைத் தம்முள் அடக்கியே அவித்து விடுவார்’ என்பது கருத்து. இதுவே வசமிழந்த காலத்து அனைவராலும் செய்தற்கு உரியது என்பதும் உணர்க.

89. அம்பும், அழலும், அவிர்கதிர் ஞாயிறும்,

வெம்பிச் சுடினும், புறஞ்சுடும்- வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும். பிறர் எய்கின்ற அம்பும், நெருப்பும் விளங்குகின்ற கதிர்களையுடைய ஞாயிறும் வெப்பங்கொண்டு உடலிலே சுட்டாலும், அவை புறமாகிய உடம்பையே சுட வல்லனவாகும். மிகவும் வெப்பங்கொண்டு மனத்தைக் கவலைப்படுத்தி எரித்தலாற், காமமானது அவற்றினுங் கொடியதெனக் கருதிச், சான்றோர்களால் அஞ்சித் துறக்கப் படுவதாகும்.

‘உடல் சுடப்படுவதினும் உள்ளஞ் சுடப்படுவதே மிக்க வேதனையைத் தருவதாதலால், அத்தகைய காமமாகிய பிறர்மனை நயத்தலைக் கைவிடுக” என்பது கருத்து.

90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு

நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள் குளிப்பினும், காமஞ் சுடுமே; குன்றேறி ஒளிப்பினும், காமஞ் சுடும்.

ஊருக்குள்ளே பற்றி எழுந்த உருவஞ்சிறந்த நல்ல நெருப்பினாற் சுடப்படாமல் நீருள் குளித்தாகிலும் அதன் வெம்மையினின்றும் தப்பிவிடலாம். ஆனால், காமமோ நீருள் மூழ்கினாலும் சுடும்; குளிர்ச்சி மிகுந்த மலையின் மேலேறிச் சோலைகளுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டாலும் சுட்டு வருத்தும்.

‘சாதாரண நெருப்பால் ஊரே பற்றி எரிந்தாலும் நீரிற் குளித்து மறைந்து அதற்குத் தப்பி விடலாம், காம நெருப்புக்கு எங்குபோய் ஒளிந்தாலும் தப்ப முடியாது; அதனால் அது