பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 55


என்பது கருத்து. அவர் சுவர்க்கம் செல்வர்; பிறர் செல்லார்


என்பதும் இதனால் சொல்லப்பட்டது.


92. முன்னரே, சாநாண், முனிதக்க மூப்புள;


பின்னரும் பீடழிக்கும் நோயுள;-கொன்னே பரவன்மின், பற்றன்மின், பாத்துண்மின், யாதும் கரவன்மின், கைத்துண்டாம் போழ்து.


நீங்கள் பிறவிஎடுப்பதற்கு முன்னரே, நீங்கள் சாகும் நாளும் வெறுக்கத்தக்க கிழத்தனமும் உங்களுக்கு நேரும் காலம் விதிக்கப்பட்டிருக்கின்றது. பின்னரும், உங்கள் பெருமையை அழிக்கும்படியான நோய்களும் உள்ளன. இதனால், கையிலே பொருள் உண்டாயிருக்கும் பொழுதிலே வீணாக மென்மேலும் அதனைத் தேடி நாலாபுறமும் ஓடாதேயுங்கள். அதனைப் பற்றிக் கொண்டும் இராதேயுங்கள். யாவருக்கும் ஈத்து, இருப்ப வற்றைப் பலரோடும் பகுத்து உண்ணுங்கள். எதையும் ஒளியாமல் இருங்கள். இதுவே நன்மை தருவதாகும்.


‘பொருள் உள்ள பொழுதே, ஊழ்வினைப்பயனால் வரும் சாக்காடு நோய் முதலியவற்றை உணர்ந்து ஈகையிலேயே மனம் செலுத்த வேண்டும் என்பது கருத்து. பீடு - பெருமை. சாநாள் - சாகும் நாள்.


93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;


கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கா லீண்டும், மிடுக்குற்றுப் பற்றினும், நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்.


செல்வமானது, தம்முடைய நல்வினையால் வந்து சேருங் காலத்திலே, பிறருக்குக் கொடுத்துத் தாம் அனுபவித்தாலும்



அதனாற் குறையாது, அச்செல்வமும் வளர்ந்துகொண்டே போகும். தம்மிடத்திலே பொருளைச் சேர்க்கும் இந்த நல்ல


வினைப்பயன் அழிந்த காலத்திலே, வலிபொருந்தி அதனைப் பிடித்துக் கொள்ள முயன்றாலும், அது நிலையாமற் போய்விடும். இதனை அறிந்து உணராதவரே, தம்மைச் சேர்ந்தவர்கள் துன்பத்தால் நடுக்கத்தை அடைந்து வாடிய காலத்தும், அதனைப் போக்காமல் கருமித்தனமாக இருப்பவர்களாவர்.


‘செல்வம் வருவதும் போவதும் முன்வினைப் பயன்; கொடுப்பதால் அது குறைந்தும் போகாது; இறுக்கிப் பிடிப்பதால் நிலைத்தும் இருக்காது; அதனால், இருக்கும்