பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாலடியார்-தெளிவுரை

போதே கொடுத்து நல்ல கதியைத் தேடிக் கொள்ளுக’ என்பது கருத்து.

94. இம்மி அரிசித் துணையானும், வைகலும்

நும்மில் இயைவ கொடுத்துண்மின்;-உம்மை கொடாஅ தவரென்பார், குண்டுநீர் வையத்து அடாஅ அடுப்பி னவர். இம்மியளவான அரிசியே ஆனாலும், உங்களுக்கு இசைந்த மட்டிலே நாள்தோறும் இரவலர்களுக்குக் கொடுத்து, அதன் பின்பே நீங்கள் உண்ணுங்கள். ஆழமான கடல் சூழ்ந்த இந்த உலகத்திலே, சமைக்காத அடுப்பை உடையவரான சோற்றுப் பிச்சைக்காரர்கள் என்பவர்கள் எல்லாம், முற்பிறப்பிலே தம்மிடம் வந்து இரந்தவர்களுக்கு ஏதும் உணவுகொடாத உலோபிகளேயாவர்.

‘அதனால், அடுத்த பிறப்பில் நாமும் அந்நிலையினை அடையாமல் இருப்பதைக் கருதியாவது கொடுத்து உண்பதில் ஈடுபடல் வேண்டும் என்பது கருத்து. இம்மி என்பது மிகச் சிறிய அளவு; ஒன்றில் தொளாயிரத்து அறுபதிலே ஒரு பங்கு

95. மறுமையும் இம்மையும் நோக்கி, ஒருவற்கு

உறுமாறு இயைவ கொடுத்தல்!-வறுமையால் ஈதல் இசையாது எனினும், இரவாமை ஈதல் இரட்டி யுறும்.

மேலுலகத்து வரும் பயனையும், இவ்வுலகத்து வரும் பயனையும் நன்றாக ஆராய்ந்து பார்த்து, ஒருவற்குப் பொருந்தும் வகையிலே இசைந்தவைகளைக் கொடுத்தல் வேண்டும். தமக்குள்ள வறுமை காரணமாக அப்படிக் கொடுத்தல் இசையாமற்போன காலத்தும், பிறரிடம் சென்று தாம் இரந்து நிற்காமையானது, கொடுப்பதினும் காட்டில் இரண்டு மடங்கு பயன் தருவதாகும்.

‘கொடுப்பது இம்மை மறுமை இன்பங்களைத் தருவது எனினும் வறுமையுற்றகாலத்துச் சென்று பிறரிடத்து இரந்து நில்லாமையோ அதைவிடச் சிறந்தது என்பது கருத்து. இரத்தல் இழிவென்பதன் மூலம் ஈகையின் பெருமை வலியுறுத்தப்பட்டது.

96. நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க

படுபனை அன்னர், பலர்நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணும், கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை.