பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - நாலடியார்-தெளிவுரை

தானாலும், அதனை எதிர்உபகாரஞ் செய்யும் வல்லமை உடைய ஒருவர்க்குக் கொடுத்தல் கொழுத்த வட்டிக்குக் கடன் கொடுத்தல் என்னும் பெயரையே உடையதாகும்.

‘கொடை என்பது பிரதிசெய்ய இயலாத வறியவர்களுக்கு மனமுவந்து கொடுத்தலே; பிறவெல்லாம் பொலிகடன் போன்றன’ என்பது கருத்து. “ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் என்னும் மணிமேகலையடியும் இதனைக் காட்டும்.

99, இறப்பச் சிறிதென்னாது, இல்லென்னாது, என்றும்

அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க! - முறைப்புதவின் ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல் பைய நிறைந்து விடும். நாம் கொடுப்பது மிகவும் சிறிய அளவினதாக இருக்கிறதே என்று நினையாமலும், இல்லை என்று சொல்லாமலும், எப்போதும், எப்படிப்பட்டவர் இடத்தும் அறமாகிய பயனுள்ள செயலைச் செய்து வருக. அப்படிச் செய்வதானது, வாயில் தோறும் முறையாகப் பிச்சைக்குச் செல்கிற தவசியினது பிச்சைப் பாத்திரத்தைப் போல, மெல்லமெல்ல அறப்பயனை முற்றவும் நிறைவு செய்துவிடும்.

‘இருப்பது கொஞ்சமானாலும் அதனையும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்துவருதல் வேண்டும்’ என்பது கருத்து. கடிஞை-பிச்சைப் பாத்திரம். புதவு-வாயில், இறப்பமிகவும்.

100. கடிப்பிகு கண்முரசங் காதத்தோர் கேட்பர்;

இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்; அடுக்கிய மூவுலகும் கேட்குமே, சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

குறுந்தடியினாலே அடித்து ஒலி எழுப்பப்படுகின்ற கண்ணினையுடைய பேரிகையின் ஒலியினைக் காததுரம் வரை உள்ளவரே கேட்பார்கள். மேகமானது இடியிடித்து முழங்கும் முழக்கத்தை ஒரு யோசனை தூரம் வரையிலும், உள்ளவரே கேட்பார்கள். ஆனால், பெரியோர்களால், இவர்கள் கொடுத்தவர்’ எனக் கூறப்படும் புகழ்ச் சொல்லையோ, ஒன்றன்மேல் ஒன்றடுக்கியதாக அமைந்துள்ள மூவகை உலகத்தவரும் கேட்பார்கள்.