பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 59

11. பழவினை

‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று சிலம்பு கூறி, அந்த உண்மையின் விளக்கமாகக் கோவலன் கொலையுண்ட நிகழ்ச்சியையும் காட்டுகிறது. அந்த ஊழ்வினை என்பதுதான், இங்கே பழவினை என்ற குறிப்பிடப்படுவதும்.

இப்பொழுது மனித உடலெடுத்துப் பிறந்திருப்போர் தம்முடைய முற்பிறப்புக்களிலே செய்த நல்வினை தீவினைகளின் பயனை இப்பிறப்பிலே தவறாது அநுபவிப்பார்கள் என்பது இதன் கருத்தாகும்.

இப்படி வரும் பழவினைகள் மூன்று வகைப்படும் என்பார்கள். அவற்றுள், ஒன்று அநாதி காலந்தொட்டு உயிர் பலப்பல பிறவிகளினும் செய்து சேர்த்துக் கொண்டிருக்கிற மொத்தவினை. அவற்றுள் இப்பிறப்பிற்கு முன்தோன்றி மறைந்த பிறவிகளால் அநுபவிக்கப் பட்டுள்ளவைபோக எஞ்சியவற்றுள், இப்பிறவியில் அநுபவிப்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட ஈவுவினை மற்றொன்று. இவ்விரண்டும் அல்லாமல் பின்னும் அநுபவிக்கக் கிடந்த இருப்பு வினைத்தொகுதி மூன்றாவது. இவை மூன்றையும் பழவினை என்பது குறிக்கும். குறள், இதனை ‘ஊழ் என்னும் அதிகாரத்தினுள் சொல்லும்.

“முற்பிறப்புக்களிலே நல்வினை செய்தவர்கள் நன்மையையும், தீவினை செய்தவர்கள் தீமையையும் துய்ப்பார்கள் என்பது ஆன்றோர் கூற்று.

101. பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாந், தாய்நாடிக் கோடலை, - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே, தற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு.

பலவான பசுக்கூட்டங்களின் இடையிலே கொண்டு போய் விட்டுவிட்டாலும், இளங்கன்றானது தன்னுடைய தாயினைத் தானே தேடிச்சென்று சேர்வதிலே வல்லமை உடையதாகும். அதுபோலவே, தொன்மையாகவே வந்து கொண்டிருக்கும் பழவினையும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தானே தேடிச்சென்று அடைவதற்கு வல்லமை உடையதாகும்.

‘தீவினைப்பயன் அந்தந்தப் பிறப்போடும் மறையாது பிற்பிறப்புகளினும் தொடர்ந்து வந்து தவறாது பலிக்குமாதலால்,