பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 w நாலடியார்-தெளிவுரை

அதனைக் கைவிட்டு நல்வினைகளில் ஈடுபடுதலே வேண்டும்’ என்பது கருத்து.

102. உருவும் இளமையும், ஒண்பொருளும், உட்கும்

ஒருவழி நில்லாமை கண்டும்.-ஒருவழி

ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு

நின்றுவீழ்ந் தக்க துடைத்து. -

மேனியின் அழகும், அதன் இளமையும், மேலான செல்வ

சம்பத்துக்களும், பலரும் அஞ்சத்தக்க பெருமதிப்பும். என்பவையெல்லாம் ஒருவழிப்பட்டு நிலையாக நிற்றல் இல்லாமையை உடையன. இதனைக் கண்டும், ஒரு பிறப்பிலேனும், ஒரு நற்செய்கையினையேனும் செய்தல் இல்லாதவனுடைய வாழ்வானது, உடலைப் பெற்று நின்று வீழ்ந்த தன்மையது என்று சொல்லும் அந்த அளவினையே உடையதாகும்.

‘பிறந்து இறந்தான் என்பதல்லாது, பிறவியின் பயனான நன்னெறிப்பட்டு அவன் உய்ந்தான் என்று சொல்ல முடியாது. அவன் நல்வினை செய்தவனல்லனாகவே, நல்லன எதுவும் அவனுக்கு வந்து வாய்க்கவும் செய்யாது’ என்பது கருத்து.

103. வளம்பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை;

அளந்தன போகம்; அவரவர் ஆற்றான்; விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்.

விளாங்காயினைத் தம்முடைய முயற்சியினால் உருட்சி யுடையதாகத் திரட்டி அமைத்தவர் எவரும் இல்லை; களாப் பழத்தினைக் கருமையாகச் செய்தவர்களும் அப்படியே எவரும் இல்லை. அவை அவற்றின் இயல்பான தன்மைகள். செல்வம் முதலியவற்றால் வளப்பத்தை அடைந்து வாழவேண்டும் என விரும்பாதவர்கள் ஒருவரேனும் இல்லை. ஆனால் இன்பங்கள் அவரவரது ஊழ்வினை காரணமாக முன்பே அவர்களின் இயல்புகளாக விதிக்கப்பட்டு அமைந்தனவாகும். இதனை அனைவரும் அறிதல் வேண்டும்.

‘தாம் வளமாக வாழ்வதையே எல்லோரும் விரும்பு கிறார்கள்; அது முன்வினைப் பயனால் வருவது என்பதை உணர்ந்து, அவர்கள் எல்லாரும் இந்தப் பிறப்பிலாவது நல்ல வினைகளைச் செய்வதிலே ஈடுபடவேண்டும் என்பது கருத்து.