பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 61

104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,

பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி வறப்பின் தருவாரும் இல்லை; அதனைச் சிறப்பின், தணிப்பாரும் இல்.

வந்து கூடும்படியான தீவினைகளைத் தடுத்தல் என்பது முனிவர்களுக்கும் ஆகாததொன்றாகும். பெறும்படியான தன்மையை உடைய நல்வினைகளும் அப்படியே தவறாமல் வந்து சேர்வனவாம். மழையானது பெய்யாமல் வறண்டு போகுமானால் அதனைக் கொணர்ந்து தருபவர்களும் எவரும் இல்லை; அது அளவுக்கு அதிகப்பட்டுப் போனால் அதனைத் தடுப்பவர்களும் எவரும் இல்லை. அது போலவேதான் ஊழ்வினைப் பயனுமாகும்.

‘மழை வறண்டபோது தருவதற்கும், அதிகமான போது தடுப்பதற்கும் எப்படி ஒருவருக்கும் வலிமை இல்லையோ, அதுபோலவே வினைப்பயன் வந்து நேரிட்டபோது அதனைத் தடுக்கவும் யாராலும் ஆகாது’ என்பது கருத்து.

105. தினைத்துணையர் ஆகித், தந் தேசுள் ளடக்கிப் பனைத்துணையர் வைகலும் பாடழிந்து வாழ்வர் நினைப்பக் கிடந்த தெவனுண்டாம், மேலை வினைப்பயன் அல்லாற், பிற?

பனையளவாக உயர்ந்த வாழ்வுடையவராக இருந்தவர்கள், தம் அளவாற் குறைந்த தினையளவினராகித் தம்முடைய சாமர்த்தியத்தை எல்லாம் உள்ளே அடக்கிக் கொண்டு, தினந்தோறும் பெருமைகெட்டு வாழவும் வாழ்வார்கள். எண்ணிப் பார்த்தால், உயர்வும் தாழ்வும் எல்லாம் முன்செய்த வினைப்பயனே அல்லாமல், வேறு என்ன உண்டாவதற்கு இருக்கிறது?

‘உயர்ந்த நிலையிலிருந்தவன் தாழ்ந்த நிலையடைவது முன் செய்த தீவினைப்பயன் என்று உணர்ந்து, நல்வினையிலேயே ஈடுபட வேண்டும் என்பது கருத்து.

106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்: கல்லாதார் வாழ்வது அறிதிரேல், கல்லாதார் சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற் கோதென்று கொள்ளாதாம், கூற்று.

பலவகைப்பட்ட சிறந்த நூற்கேள்விகளினால் பிறவியின் உண்மையான பயனை அறிந்தவர்கள் அழிவு எய்தவும், எதுவும்