பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாலடியர்-தெளிவுரை

கல்லாத மூடர்கள் நெடுங்காலம் வாழ்வதும் உலகில் நடப்பதை அறிந்திருக்கிறீர்கள். படியாதவர்கள் அறிவு என்னப்பட்ட அந்தச் சாரத்தைத் தமது உள்ளே உடைத்தாகாமையால், அவர்களைக் கூற்றுவன் சக்கை என்று நினைத்து எடுத்துக் கொள்ளாது போய் விடுகின்றான் போலும்!

‘நல்லவர்கள் சீக்கிரமே அழிவதும், கெட்டவர்கள் நெடுங்காலம் அழிவின்றி வாழ்வதும் ஏன் என்றால், அது அவரவர் வினைப்பயனால் வந்து நேர்ந்தன என்று கொள்ளவேண்டும் என்பது கருத்து.

107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண,

நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம்.-அடம்பம்பூ அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப! முன்னை வினையாய் விடும். அடம்பங் கொடியின் பூக்களை அன்னப்பறவைகள் கோதிக் கிழித்து விளையாடுவதற்குரிய இடமாக விளங்கும், அலைகளையுடைய - கடலினது குளிர்ந்த கரைகளையுடைய நாட்டின் தலைவனே! ‘சிலர் துன்பமிகுந்த உள்ளத்தை உடையவர்களாகி, எல்லாரும் காணும்படியாகச் செல்வர்களின் பெரிய வாயில்களிலே சென்று நின்று, பிச்சைக்காக வருந்தியிருக்கும் நிலைமை எல்லாம், முற்பிறப்பிலே அவர்கள் செய்த தீவினைகளின் பயனால் வந்து இப்பிறப்பிலே நிலைபெற்றதேயாகும்” என்று அறிவாயாக.

‘இதனால், இப்பிறப்பிலே பலரும் அனுபவிக்கிற நன்மை தீமைகளுக்கெல்லாம் பழவினையே காரணமென்பது கருத் தாகும். இடும்பை-வருத்தம். அலைகடல் அலைகின்ற கடலும் ஆகும்.

108. அறியாரும் அல்லர், அறிவது அறிந்தும்,

பழியோடு பட்டவை செய்தல்,-வளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப! செய்த வினையான் வரும். காற்றானது விரைவாக வீசி நெய்தற் பூக்களினின்றும் தேனைச் சிந்துகின்ற, நீண்ட கடலினது குளிர்ச்சியான துறையையுடைய தலைவனே! ஒருவர் அறியாதவர்களும் அல்லராகி, அறியவேண்டுவன எல்லாம் தெரிந்திருந்தும், நிந்தனையோடு பட்ட செயல்களை எல்லாம் செய்வது,