பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 65

112. தக்காரும் தக்கவர் அல்லாரும், தந்நீர்மை

எக்காலும் குன்றல் இலராவர்-அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம், தேவரே தின்னினும், வேம்பு.

தகுதியை உடைய சான்றோர்களும், தகுதியற்ற கீழோரும் எக்காலத்தினும் தத்தம் இயல்பான குணங்களினின்றும் குறைதல் இல்லாதவராவார்கள். கருப்பஞ்சாற்றுக் கட்டியானது எவர் தின்றாலும் கசக்காது; ஆனால், வேப்பங்காயோ தேவர்களே தின்றாலுங்கூடக் கசக்கவே செய்யும்.

‘தக்கார் எந்தக்காலத்தும் தம் தகுதியிற் குறையார்கள். தகுதியற்றோர் எந்த உயர்வினை அடைந்தாலும், தம் கீழ்மைப் பண்பினின்றும் நீங்கார் என்பது கருத்து.

113. காலாடு போழ்தில், கழிகிளைஞர், வானத்து

மேலாடு மீனிற் பலராவர்,-ஏலா இடரொருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற நா ட ‘தொடர்புடையேம் என்பார் சிலர்.

குளிர்ச்சி பொருந்திய மலைகளையுடைய நாட்டிற்குத் தலைவனே ஒருவனுக்குச் செல்வாக்கு உண்டான காலத்திலே, வானத்தின் மேலே இயங்குகின்ற விண்மீன்களினும் மிகுதியான பலர் கூடிவந்து அவனுக்கு நெருங்கிய உறவினராவார்கள். அவ்வொருவனே தகாத துன்பம் ஒன்றை அடைந்த காலத்திலோ, அவனுடன் தொடர்புடையவராயிருக்கிறோம் என்று சொல்லுபவர்களோ மிகவும் சிலராயிருப்பார்கள்.

இதனால், ‘பொய்யுறவு காட்டிச் செல்வமுடைய காலத்தில் வந்து தொடர்புகொள்பவரின் உண்மை நிலைமையை ஆராய்ந்து உணரவேண்டும் என்பது கருத்து.

114. வடுவிலா வையத்து, மன்னிய மூன்றில், நடுவணது எய்த, இருதலையும் எய்தும்; நடுவணது எய்தாதான் எய்தும், உலைப்பெய்து, அடுவது போலுந் துயர். குற்றமில்லாது அமைந்த இந்த உலகத்திலே பொருந்திய, அறம் பொருள் இன்பம் என்று சொல்லப்படுகின்ற மூன்றனுள், நடுவிற் சொல்லப்பட்ட பொருளானது வந்து வாய்க்க, அதன் முன்னும் பின்னுமுள்ள அறமும் இன்பமும் வந்து வாய்ப்பனவாகும். நடுவிற் சொல்லப்பட்ட பொருள் வந்து