பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 67

இதனால் அடங்காதவரது இயல்பின் உண்மை நிலைமை கூறப்பட்டது.

117. தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்இகழ்க! என்னை, அவரொடு பட்டது? - புன்னை விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கும் உறும்.

புன்னை மரங்களின் பெருமையுடைய பூக்கள் மணங்கமழ்கின்ற கானற்சோலைகள் மிகுந்துள்ள கடற்கரை களுக்கு உரிய தலைவனே! ஒரு காரணமும் இல்லாமல் நம்மை இகழ்ந்து பேசுபவர்களை, அவர் நம்மை இகழ்வதற்கு முன்னமே நாம் நிந்தித்து ஒதுக்கிவிட வேண்டும். நம்மை இகழ்கின்ற அவர்மீது நமக்குண்டாகிய கண்ணோட்டம் எதற்காகவோ? வரத்தக்கனவாகிய இன்பதுன்பங்கள் எவர்க்கும் வந்தே தீரும்.

‘நன்மை தீமைகள் வருவன வந்தே தீரும். அதனால் தம்மை இகழ்பவரை எவரும் பாராட்ட வேண்டியதில்லை. அவரை இகழ்ந்து ஒதுக்குக’ என்பது கருத்து. இதனால், கீழோர் இயல்பும் அவரை ஒதுக்க வேண்டியதான உண்மையும் கூறப்பட்டது.

118. ஆவேறு உருவின வாயினும், ஆபயந்த

பால்வேறு உருவின அல்லவாம்;-பால்போல் ஒரு தன்மைத் தாகும் அறம், நெறி, ஆபோல் உருவு பலகொளல், ஈங்கு.

பசுக்கள் வெவ்வேறு வகையான உருவத் தோற்றங்களை உடையனவாகக் காணப்பட்டாலும், அவற்றின் பயனான பால் வெண்மையேயன்றி வெவ்வேறான தோற்றம் உடையதன்று. அதைப்போலவே, தருமமும் ஒரே தன்மையினை உடையதே யாகும். இவ்வுலகத்திலே அதன் வழிகள் அப்பசுக்களைப் போலப் பல்வேறு உருவுகளைக் கொண்டிருத்தலும் உண்மை யாகும்.

‘தருமம் பல்வேறாக இருந்தாலும் அவற்றால் விளையும் பயன் உயிருக்கு நற்கதியான ஒன்றேயாகும்’ என்பது கருத்து. இதனால் அறத்தின் உண்மை நிலை கூறப்பட்டது.

119. யாஅர், உலகத்தோர் சொல்லில்லார், தேருங்கால்

யாஅர், உபாயத்தின் வாழாதார்?-யாஅர்; இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர், கடைபோகச் செல்வமுய்த் தார்?