பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாலடியார்-தெளிவுரை

இதனாற் பறவைகளைக் கூட்டில் அடைத்துவைக்கும் தீவினையின் பயனைக் கூறி, அதற்கு அஞ்சி அதனைக் கைவிடவேண்டிய முதன்மையும் வற்புறுத்தப் பட்டது.

123. அக்கேபோல் அங்கை ஒழிய, விரல் அழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே-அக்கால், அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால். அந்தக் காலமாகிய முற்பிறவிகளில் நண்டைத் தின்னலை மிகவும் விரும்பி, அதன் காலையொடித்துப் போட்டுச் சுட்டுத்தின்ற பழைய வினையானது இந்தப் பிறப்பிலே வந்து அமைந்ததென்றால், சங்கு மணியைப் போல உள்ளங்கை மாத்திரம் எஞ்சியிருக்க, விரல்கள் எல்லாம் அழுகிப்போய்த் துக்கத்தைத் தருகின்ற குட்டநோய் உண்டாகப் பெறுவார்கள்.

நண்டு முதலியவற்றை முரித்துத் தின்றதனால் வரும் துன்பங் கூறி, அத்தீவினையை அஞ்சி நீக்கவேண்டும் என்றது இது. அக்கு-சங்கு -

124. நெருப்பழற் சேர்ந்தக்கால், நெய்போல் வது உம்

எரிப்பச் சுட்டு, எவ்வநோய் ஆக்கும்;-பரப்பக் கொடுவினையர் ஆகுவர், கோடாரும், கோடிக் கடுவினையர் ஆகியோர்ச் சார்ந்து.

நெய்போன்ற மென்மையும் இதமுமான ஒரு பொருளும், எரியும் நெருப்பினைச் சேர்ந்த காலத்து, உடலை எரிக்கும் படியாகக் காய்ந்து துன்பப்படுத்துகின்ற நோயினை உண்டாக்கும். அதுபோலவே, நல்லொழுக்கங்களிலே இருந்து தவறாதவர்களுங்கூடக் கடுமையான தீவினை செய்பவர்களைச் சார்ந்த காலத்துத், தாமும் தம் ஒழுக்க நெறியினின்றும் கோணுதலுற்று, மிகவும் கொடிய செயல்களைச் செய்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

‘தீவினைக்கு அஞ்சுவது மட்டுமின்றித் தீவினை செய்வாரோடு, தொடர்பு கொள்ளுவதுங் கூடாதென அஞ்சி ஒதுங்கவேண்டும் என்றது இது.

125. பெரியவர் கேண்மை, பிறைபோல, நாளும்

வரிசை வரிசையா நந்தும், -வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே, சிறியார் தொடர்பு.