பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 71

அறிவினாற் பெரியோர்களாக விளங்குபவர்களுடைய நட்பானது இளம்பிறையைப் போல முதலிற் சிறியதா ‘யிருந்தாலும், முறையே நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும். சிற்றறிவு உடையவர்களுடைய நட்போ வானத்திலே தவழ்கின்ற முழுமதியைப்போல, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போகும்.

சிறியோர் நட்பினது புன்மை கூறி, அதனைக் கை விட்டுப் பெரியோர் உறவையே நாடுதல் வேண்டுமென்பது வற்புறுத்தப்பட்டது.

126. சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன், சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின்,-சார்ந்தோய்!

கேள்; சாந்தகத் துண்டென்று, செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்டன்னது உடைத்து.

‘இவர் எல்லாவகையான நற்குணங்களும் நிரம்பிய சான்றோர் ஆவர்’ என மதித்து சிலரை மிகவும் நேசித்தாய். அப்படி நேசித்த உனக்கு நீ சேர்ந்தவர்களிடத்திலே அத்தகைய சற்குண நிறைவு இல்லையானால், அவர்களை அடுத்தவனே! நின் நிலைமையைக் கேட்பாயாக! ஒருவன் உள்ளே வாசனைச் சாந்து இருக்கிறதென்று செப்பைத் திறந்து, அதனுள்ளே பாம்பைக் கண்டதுபோன்ற நிலையை உடையதுதான், உன் நிலையும் ஆகும்.

ஆராயாமல் கொள்ளும் தொடர்பினால் வரும் தீவினை கூறி, அதனை விலக்குவது வற்புறுத்தப்பட்டது.

127. யாஅர், ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்

தேருந் துணைமை உடையவர்?-சாரல் கனமணி நின்றிமைக்கும், நாட! கேள்; மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு.

மலைச் சாரல்களிலே பெருமை பொருந்திய நவமணிகள் நிலைபெற்று கிடந்து பளபளவென ஒளிவீசிக் கொண்டிருக் கின்ற நாட்டை உடையவனே! கேட்பாயாக, ஒருவருடைய உள்ளத்தை இன்னதொரு தன்மையுடையதென்று ஆராய்ந்து அறியும் வல்லமை உடையவராகிய ஒருவர் எவர் இருக்கிறார்? ஒருவருமே இல்லை. ஏனெனில், மனிதர்களின் உள்ளமும் அவர்களுடைய செய்கையும் வேறு வேறாயிருக்கும் தன்மையை உடையனவாகும்.