பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாலடியார்-தெளிவுரை

134. வைப்புழிக் கோட்படா, வாய்த்தீயின் கேடில்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின்,-வவ்வார்; எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சை மற்று அல்ல, பிற.

கல்வியானது தான் வைக்கப்பட்டுள்ள இடத்தினின்றும் பிறரால் களவாடப்பட முடியாதது. கொள்பவர் தகுதியுடை யவராக வாய்த்து, அவருக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அதனால் வளர்ச்சி உண்டேயல்லாமல் அழிவில்லை. மிகுதியான சிறப்பின் காரணமாக அரசர்களே சினங்கொண்டு வந்தாலும் கவர்ந்து சென்றுவிட மாட்டார்கள். ஆதலால் ஒருவன் தன் மக்களுக்குத் தான் விட்டுச் செல்லும் செல்வ மென்று சேர்த்துவைக்கத் தக்கவை, கல்விப் பொருள்களே யல்லாமல் பிற அல்ல என்று அறிதல் வேண்டும்.

‘மக்களுக்குச் செல்வத்தைச் சேமித்து வைத்துப் போவதைவிட அவர்களைக் கல்வியறிவு உடையவர்களாக்கி வைப்பதே சிறந்ததாகும் என்பது கருத்து. எச்சம்-எஞ்சி நிற்பது. விச்சை - கல்வி.

135. கல்வி கரையில; கற்பவர் நாள்சில:

மெல்ல நினைக்கின், பிணிபல;-தெள்ளிதின் ஆராய்ந் தமையுடைய கற்பவே, நீர்ஒழிய பாலுண் குருகிற் றெரிந்து. வித்தையாகிய கடலோ தனக்கொரு கரையேனும் இல்லாது முடிவின்றி விளங்குவதாகும். அவற்றைக் கற்பவர்களது வாழ்நாட்களோ மிகவும் சிலவாகும். பொறுமையாக நினைத்துப் பார்த்தோமானால், அந்த வாழ்நாட்களினும் இடையிடையே வந்து வருத்தும் நோய்களும் பலவாகும். ஆதலால், நீரினைத் தனியாகப் போகுமாறு பிரித்து ஒதுக்கிவிட்டுப் பாலைமாத்திரம் தான் உண்ணுகின்ற இயல்பினையுடைய அன்னப்பறவை போலத் தெளிவாக ஆராய்ந்து தமக்குப் பொருத்தமான சிறந்த நூல்களை மட்டுமே அறிவுடையோர் படிப்பார்கள்.

‘அமைவுடைய என்றது, அறிவுக்கு வளந்தருகின்ற உண்மைப் பொருள் கூறும் நூல்களை; அவற்றை மட்டுமே கற்கவேண்டும் என்பது கருத்து.

136. தோணி இயக்குவான், தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றிகழார்;-காணாய்!