பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 79 ‘கற்பதினும், உயிர்க்கு உறுதிதரும் நூற்களைக் கற்பதே சிறந்தது என்பது கருத்து.

15. குடிப் பிறப்பு

தமிழ் அறநூல்கள், பிறப்பினால் உயர்வு தாழ்வு என்ற நிலையினை வன்மையாக மறுத்துக் கூறுவன. எனினும், அவை ஒவ்வொரு குடியின் பழக்கவழக்க வேறுபாடுகளால் அவற்றுள் சில உயர்குடியாகவும், சில உயர்குடி அல்லாததாகவும் விளங்குவதையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

சாதிக்குத் தக்க பழக்க வழக்கங்கள் சில நிலவுவது உண்மைதாம். அவை காலப்போக்கிலே அந்தக் குறிப்பிட்ட குடும்பத்தார் சமூகத்தின் பல்வகைச் சூழல்களால் நம்முடைய வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள நேரிட்ட காரணத்தால் உருவானவை. இப்படியே ஒவ்வொரு குடும்பமும் தனக்கென ஒருவகையான பண்பாட்டு ஒழுக்கத்தைப் பேணிவந்து கொண்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலையிலே பிறந்து வளரும் மனிதர்களும், அந்தந்தப் பண்பாட்டினைக் கொண்டவர் களாகவே விளங்குகின்றனர். இந்த உண்மையை மறைப்பதற்கில்லை. உயர்ந்த குடியினரிடையே கல்வியும், நல்லொழுக்கமும் இயல்பாகவே படிந்திருக்கவேண்டும். அப்படிப் படிந்திருப்பதன் காரணமாக விளங்கும், அத்தகைய நற்குடிப்பிறப்பின் சிறப்பை இந்தப் பகுதி கூறுகிறது. நற்குடிப்பிறத்தல் ஊழ்வினைப் பயனால் வருவது என்பது சான்றோர் கொள்கை. 141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்,

குடிப்பிறப் பாளர்தம் கொள்கையிற் குன்றார்; இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புற் கறிக்குமோ மற்று? உடுக்கப்படும் ஆடையும் கந்தலாய்ப்போன வறுமையினை அடைந்து தக்க உணவு இல்லாத காரணத்தால் தம் உடம்பும் மெலிவுற்று நலன் அழிந்துபோன காலத்தினும், உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள், தம்முடைய அந்தக் குடிக்கு உரிய கொள்கையினின்றும் குறைபடவே மாட்டார்கள். பசியினா லாகிய துன்பமானது மிகுதியாக நேர்ந்தவிடத்தும், சிங்கமானது கொடியாகப் படர்ந்திருக்கும் புல்லைத் தின்னுமோ?

‘அது தின்னாதது போலவே அவரும் குடிப்பண்பிற்குக் குறைவுநேரும் செயலிலேஈடுபடமாட்டார்கள் என்பது கருத்து.