பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 81

144. நல்லவை செய்யின் இயல்பாகும்; தீயவை

பல்லவர் தூற்றும் பழியாகும்; எல்லாம் உணருங் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ, புணரும் ஒருவர்க் கெனின்?

உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் ஒரு நல்ல செயலைச் செய்தால், அது அவர்களுடைய குடிப்பிறப்பின் இயல்பு என்று கருதப்படும். அவர்கள் தீய செயலைச் செய்தாலோ பலரும் தூற்றிப் பரப்புகின்ற பெரும் பழியாகிவிடும். ஆதலால், நல்ல குடியிலே பிறத்தல் என்பது ஒருவருக்கு வந்து வாய்க்குமானால், எல்லாவற்றையும் அறியவல்லதான அந்தப் பிறப்பினால்தான் அவர் அடைந்த பயன் என்னவோ?

அந்தக் குடிப்பிறப்பும் பயன் அற்றது என்று சொல்வது போல, அந்த உயர்குடிப் பிறப்பைப் புகழ்ந்தது இது. தாம் செய்யுந் தீயவையால் எழும் பெரும்பழிக்கு அஞ்சி அவர் அவற்றின்கண் ஈடுபடமாட்டார் என்பது குறிப்பு.ஊதியம்-பயன். புணரும்-வந்து பொருந்தும்.

145 கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,

சொல்லாமை உள்ளுமோர் சோர்வச்சம்; எல்லாம் இரப்பார்க்கொன் lயாமை அச்சம்; மரத்தார், இம் மாணாக் குடிப்பிறந் தார்.

தாம் கல்லாதவராகிவிடக் கூடாதே என்ற அச்சமும், தாம் மூடர்களின் தொழில்களுள் எதையாவது செய்து விடக் கூடாதே என்ற அச்சமும், தீய சொற்களைச் சொல்லாம லிருப்பதில் எப்போதாவது தவறிவிடுவோமோ என்ற சொல்லின் தளர்ச்சியைக் குறித்த அச்சமும், தம்மிடம் வந்து இரந்து நிற்பவர்க்கு எதுவும் கொடாமல் இருக்கக் கூடாதே என்ற அச்சமும் - இப்படிப் பல்வேறு அச்சங்களும் நல்ல குடியிலே பிறந்தவர்களுக்கு உள்ளனவாம். அதனால், இப்படி அச்சமே மிகுதியாகவுடைய மாண்பற்ற குடியிலே பிறந்தவர்கள், கடலிடையே செல்லும் மரக்கலத்திலே உள்ளவர்களைப் போன்று சதா கவலையே உடையவர்கள் ஆவார்கள்.

உயர்குடிப் பிறந்தோர் இவற்றுக்கெல்லாம் அஞ்சுவர்; கயவரோ அஞ்சமாட்டார்; அதனால் அச்சமுடைய இது என்ன பிறப்பு? இப்படிப் பழிப்பதன் மூலம் அவர்களுடைய உயர்வைப் போற்றுவது இது.