பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 85

152. இசையும் எனினும், இசையாது எனினும்,

வசைதீர எண்ணுவர், சான்றோர் - விசையின் நரிமா உளங்கிழித்த அம்பினிற் lதோ, அரிமாப் பிழைப்பெய்த கோல்?

பெரியவர்கள் ஒன்றைச் செய்தல் தமக்கு இயலுவது என்றாலும், இயலாதது என்றாலும் பழிப்பிற்கு இடமில்லாத சிறந்த காரியங்களைப் பற்றியே நினைப்பார்கள். வேகமாகச் சென்று நரியென்னும் விலங்கின் நெஞ்சைக் கிழித்துக் கொன்ற அம்பினைக் காட்டினும், சிங்கமானது குறிதவறலாற் பிழைத்துப்போக எய்த அம்பானது தாழ்வானதோ? (இல்லை என்பது கருத்து).

பெரியோர் உள்ளம் பெரிய காரியங்களிலேயே செல்லும் என்பதுடன், சிறியவற்றிற் செல்லாது என்பதையும் கூறிப் பெரியோர் பெருமை காட்டப் பெற்றது.

153. நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும், சான்றோர்

குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார், -உரங்கவறா, உள்ளமெனும் நாரினாற் கட்டி, உளவரையால் செய்வர், செயற்பா லவை.

உணவு இன்மை காரணமாக உடல் மெலிவடைதலால், நரம்புகள் மேலே எழுந்து தோன்றப் பெற்று மிக்க வறுமையினை உடையவர்களாக ஆனாலும், சான்றோர்கள் எல்லை கடந்து குற்றமான செய்கைகளை மேற்கொண்டு, அளவுக்குமீறிச் செல்லவே மாட்டார்கள். தம்முடைய அறிவையே கவறாக வைத்துத் தம் முயற்சியென்னும் நாரினாலே உள்ளத்தைக் கட்டித் தம்மிடத்தே உள்ள அளவிற்கு ஏற்பச் செய்யத்தகுந்த நல்ல காரியங்களையே செய்வார்கள்.

கவறு-பிளந்த பனைமட்டை குரம்பு எல்லை. ஏறார் - மென்மேற் செல்லார். உரம்-அறிவு. மேன் மக்கள் எப்போதும் வரம்பு கடக்கவே மாட்டார்கள். இழிவான செயல்களிலே ஈடுபடார்கள், உபகாரம் செய்பவராயிருப்பார்கள் என்பன கூறப்பெற்றன.

154. செல்வழிக் கண்ணொருநாள் காணினும், சான்றவர்

தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்; நல்வரை நாட! சிலநாள் அடிப்படின், கல்வரையும் உண்டாம், நெறி.