பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 87

அது இனிய சுவையுடையதாகவே இருக்கும். தம்மீது குற்றம்

தோற்றும்படியாகப் பிறர் தம்மைத் திட்டிப்போன காலத்தும்,

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம்முடையநல்ல பண்பினின்றும்

கெட்டுப் போனவர்களாகத், தங்கள் வாயினால் தீயசொற்களை

ஒருபோதும் சொல்லவே மாட்டார்கள்.

‘பிறர் வருந்திய காலத்தும் மேன்மக்கள் தம் மேன்மை

யான குணத்தினைக் கைவிடமாட்டார்கள்’ என்பது கருத்து.

157. கள்ளார், கள்ளுண்ணார்; கடிவ கடிந்தொரீஇ

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்,-தள்ளியும், வாயிற்பொய் கூற்ார், வடுவறு காட்சியார் சாயின், பரிவ திலர்.

குற்றமற்ற அறிவினை உடையவராகிய மேன்மக்கள் எனப்படுவோர் திருடமாட்டார்கள், கள் குடிக்கமாட்டார்கள்; தள்ளத் தகுந்தவைகளை தள்ளி நீங்கி இருப்பார்கள்; அயலாரை அவமானமாக இகழ்ந்து பேசமாட்டார்கள்; தமக்கு எதனாலாயினும் தளர்ச்சி வந்த காலத்தும் அதற்காக வருத்தப்படவும் மாட்டார்கள்.

மேன்மக்களுடைய சிறந்த ஒழுக்கங்கள் இதண்கண் கூறபபடடன.

158. பிறர்மறை யின்கண் செவிடாய்த், திறன் அறிந்து

ஏதிலார் இல்கண் குருடனாய்த், தீய புறங்கூற்றின் மூகையாய், நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு.

ஒருவன், அயலாருடைய இரகசியங்களைக் கேட்பதிலே செவிடனாகவும், அயலானது மனைவியைப் பார்க்குங் காலத்திலே குருடனாகவும், ஒருவர்மேல் தீய சொற்களை அவர்களைக் காணாத இடத்திலே சொல்லுவதிலே ஊமையாகவும், நல்லொழுக்கத்தின் தன்மையை அறிந்து நிற்பானானால், அப்படிப் பட்டவனுக்கு வேறெந்தத் தருமமும் பிறர் சொல்ல வேண்டியதில்லை.

‘மேற்சொன்னவையே சிறந்த தருமங்கள் என்பது கருத்து.

இதனால் மேன்மக்களுடைய ஒழுக்கத்தின் தகுதி கூறப்பட்டது. மறை-இரகசியம். மூகை-மூங்கை, ஊமை.