பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


காசுக்கு உதவாத கம்மியர்கள் கண்டபடி பேசுவார். அதற்காக நீ விம்மிப் பொரு முதல் வீண் செயலாகும். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணி அவர்களைத் தெருட்டுவது கருதி அறிவுரை கூறவேண்டாம். அவர் மீது சினந்து பயனில்லை. மேன்மக்கள் பொறுமையைக் காட்டுவர். கீழ்மக்கள் சிறு சொல் கூடப் பொறுக்க மாட்டார்சுள். அடக்கம் என்பது யாது ? முடங்கிக் கிடந்து ஒடுக்கம் கண்ட முதியவர் கொள்ளும் நடுக்கம்; அஃது அடக்கம் அன்று.

கோடிக்கணக்கில் குவித்த அவன் தன்னைத் தேடி வருவோர்க்கு ஜோடிப் புடவை தருகிறான் என்றால் அது கொடை அன்று; ஊர்ப் பெருந்தனக்காரன் செருக்கு மிக்கவன்; அவன் காந்தி சீடன் ஆயினால் அஃது உண்மையில் வியப்புச் செய்திதான். வலிவுள்ளவன் மெலிவு காட்டுவது பாராட்டத்தக்கது. இல்லாதவன் கொடை மதிக்கத்தக்கது.

குடிப்பெருமை உடையவர் என்றும் கண்ணியமும் கட்டும் கொண்டு நடப்பர். நற்குடிப் பிறந்த நயத்தால் நாகமெனச் சீறுபவன் வேகம் அடங்கி விரும்பத்தக்கவன் ஆகின்றான். மந்திரத்துக்கு நாகம் கட்டுப்படுகிறது. குடிப் பெருமைக்குத் தனிமனிதன் விட்டுக் கொடுக்கிறான். உயர்குடிப் பிறந்தவர்கள் சினம் காட்டுவது இல்லை.

"வெற்றிக்கு வழியாது? அதனைக் கற்றுத் தருகிறது நாலடியார். எதிரி அவன் கண்டபடி பேசினாலும் நீ பதறி அவனை எதிர்க்காதே. தீமைகளைக் கண்டும் காணாமலும் விட்டுவிடு; இஃது உனக்கு ஏற்றம் தரும்; இது நாலடியார் சொல்லும் மாற்றம்."