பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 98 23. நட்பிற் பிழை பொறுத்தல் நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்; நெல்லுக் குமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு; - புல்லிதழ் பூவிற்கும் உண்டு. 221 செறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டோர் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்; வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.’ 222 இறப்பவே தீய செயினும்தன் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்ருே?- - s நிறக்கோங்(கு) உருவவண் டார்க்கும் உயர்வரை நாட ! ஒருவர் பொறைஇருவர் நட்பு. 223 மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம் கடுவிசை காவாய் கரைய8லக்கும் சேர்ப்ப ! விடுதற் கரியார் இயல்பிலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டிய தீ. - 224 இன்ன செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னகப் போற்றிக் கொளல்வேண்டும்; பொன்னெடு கல்லில் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். 225