பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 நட்பியல் 23. நண்பரது குற்றத்தைப் பொறுத்தல் நல்லவர் என்று எண்ணித் தாம் முதலில் மிகவும்விரும்பி நட்பு கொண்டவரை, பிறகு நல்லவர் அல்லர் என்று அறியினும், அவரது குற்றத்தை உள்ளேயே அடக்கிக் கொள்ளவேண்டும்; ஏனெனில், நெல்லுக்கும் உமிஉள்ளது; நீருக்கும் நுரை உள்ளது; பூவுக்கும் அழகற்ற புற இதழ் உள்ளது. 221 தண்ணிரை விரும்பி நோக்கி வாழும் உழவர், வயலில் மடைகட்டுந்தோறும் உடைத்துக் கொண்டாலும் அந்தச் செவ்விய நீரிடம் சினங்கொள்ளார்; மீண்டும் நீரை மடக்கிக் கட்டுப்படுத்துவர்; அதுபோல, தாம் விரும்பிப் பெற்றவரது நட்பை, அவர் வெறுக்க வெறுக்கக் குற்றம் புரியினும் நல்லோர் விடாது பொறுப்பர். . 222 நல்ல நிறமுடைய கோங்க மலரிலே அழகிய வண்டுகள் ஒலிக்கும் உயர்ந்த மலைநாடனே! மிகவும் தீமைசெய்யினும் தம் நண்பரைப் பொறுத்தல் தக்கதொரு செயலேயல்லவா? ஒருவரது பொறுமையாலேயே இருவரது நட்பு ಶಿಶಿಷ್ಟ್ರ 223 மடிந்து விழும்.அலைகள் கொழிக்கும் உயர்ந்த ஒளியுடைய முத்துக்களும் மிக்கவேகமுடைய மரக்கலங்களும்கரையிலே மோதியலையும் கடல் நாடனே விடமுடியாதபடி நட்பு செய்யப் பெற்றவர் நற்பண்பு இல்லாதவரானல், அவர் நமது உள்ளத்தை எரிக்க முட்டிய நெருப்பாவார். 224 பொன்னுடன் நல்ல வீட்டையும் முன்னுெருநாள் பற்றி எரித்துவிட்ட நெருப்பை நாம் நாள்தோறும் நாடி நம் வீட்டில் சமையலுக்காக வளர்ப்பதால், துன்பம் செய்யினும் விடத்தகாத நண்பரைப் பொன்னேபோல் போற்றி வைத்துக் கொள்ளவேண்டும். 225