பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 நட்பியல் அடைதற்கரிய சிறப்புடைய-விண்ணே முட்டும் நீண்ட மூங்கில்கள் நிறைந்த மலைநாடனே! துன்பம் செய்தாலும் கைவிட முடியாதவரைச் சேர்க்காது விலக்குதல் தகுமோ? கண்ணக் குத்திவிட்டதென்று தம் கையையே Taಣ್ಣ . ‘. 22. வெட்டிவிடுவரோ? விளங்கும் நீரையுடைய குளிர்ந்த கடற்கரைத்தல்ேவனே! பெரியோர் கலந்து பழகியபின் நண்பரிடம் குற்றம் காணமாட்டார் அவ்வாறு பழகியபின் குற்றம் எடுத்து கூறுகிற-உறுதியான் அறிவு இல்லாத் அற்பர்கள், தாமும் அந்த நண்பரைப் போலவே க்டைப்பட்டவராவர். 227 ஒலிக்கும் அருவி ஓடும் மலைநாடனே அயலார் செய்தது மிகவும் தியதே என்ருலும், பார்க்குமிடத்து, அதற்காக வருந்துவது என்னவேண்டிக் கிடக்கிறது? எனவே, நம் மிடம் அன்புமிக்கவர் தவறிச் செய்த தீமையும் நெஞ்சிலே நின்று ஆராயப்படுங்கால் நல்லதேயாம் ! #28 தம்மைச் சேர்ந்தவர் என்று நம்பித் தம்ம்ால் முன்பு நட்பு கொள்ளப்பட்டவரை, தம்மைச் சேர்ந்தவர் அல்லர் என்று பின்பு தாம் அறியின், அவரைத் தம் உறவினரினும் நன்கு மதிப்பதுபோல் வெளிக்குக் காட்டி, அவர் தம்மவர் அல்லர் என்பதைத் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்க. 229 ஒருவனை நண்பகைக்கொண்டபின் அவனது குற்றத்தை யும் மற்ற குணத்தையும் யான் ஆராய்ந்து திரிவேனே யாயின், ஒலிக்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகம் எள்ளி நகைக் கும்படி, நண்பனது மறைச்செய்தியை (இரகசியத்தை)க் காக்காமல் வெளிவிட்டவன் அடையும் இடத்தை(நரகத்தை) யானும் அடைவேகை ! 230