பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 நட்பியல் 24. பொருந்தா நட்பு - கறுப்பான குன்றுகளிலே பொங்கும் அருவி வீழும் நீர்வளம் மிக்க நல்ல மல்ே நாடனே ! நல்ல கட்டமைப்பு இல்லாத பழைய கூரையின்கீழ் மழைபெய்யும்போது சேற்றைஅணையாகக் கட்டியும் ஓரிடத்தில் நீரை இறைத்து மற்ருேரிடத்தில் கலங்களை (பாத்திரங்களை) ஏந்தி நீரைப் பிடித்தும்துன்புறுவதுபோலச் சிலர் தம் காரியம் கைகூடும் வரை நம் துன்பங்களில் பங்கு கொள்ளும் நண்பர் போல் நடிப்பர். 231 வெண்மையான அருவி ஒடும் மல்ே நாடனே ? மேலோர் நட்பு உயர்ந்த பெருமையுண்டயதாய், மழைபோல் சிறந்த பயனளிக்கும். சிறந்த வாழ்வு வந்தபோதும் சிறப்பு அமையாத கீழோர் நட்பு, மழைவறண்டாற்போல் பயனில் தாகும். 232 நுண்ணிய அறிஞருடன் பழகி நுகரும் இன்பம், விண் னுலக இன்பம்போல் விருப்பத்திற்குரியதாகும். நுண்ணிய நூலறிவு இல்லாதவராகிய பயனிலிக்ளுடன் பழகுதல் நரக வேதனையுள் ஒன்ருகும். - 233 பக்கங்களி லெல்லாம் நீண்ட சந்தனச் சோலைகள் நிறைந்த மலைச்சாரல் நாடனே உண்மைப் பற்று இல்லாத வரது நட்பு முதலில் வளர்வதுபோல் தோன்றி, பின்னர், வைக்கோல் போரில் பிடித்த நெருப்பைப்போல் சிறு பொழுதும் நில்லாது மறையும். 234 செய்ய முடியாததை யாம் செய்வோம் என்று பொய்ப் பெருமை பேசுதலும் செய்யக்கூடியதைச் செய்யாமல் காலந் தாழ்த்தி நீட்டிக்கொண்டு போதலும் (ஆகிய இரண்டும்), உண்மையில் இன்புறும் நுகர்வை வெறுத்த துறவியர்க்குங்கூட அப்பொழுதே துன்புறும் நிலைமையை உண்டாக்கும். 235