பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 இன்பவியல் இன்ப இயல் 25. நல்லறிவு உடைமை வருத்துதற்கரிய வலிமையுடைய இராகு என்னும் பாம்பு, சிறிய இளம் பிறையாய் இருக்கும்போது நிலாவைப் பிடிக்கச் செல்லாது. அதுபோல, தகுதிவாய்ந்த மேலோர் பகைவர் பணியும் நிலைமை பார்த்து, அவர்க்காகத் தாமே நாணி, அவர்மேல் போருக்குச் செல்லார். அறிவாயாக. பெரிய குளிர்ந்த கடற்கரை நாடனே! வறுமையுற்ற மாந்தர்க்கு அடக்கம் அணிகலமாகும். ஒருவன் பணி வில்லாத் தன்மையுடன் அளவு மீறி நடப்பாயிைன், அவன் வாழும் ஊராரால் அவனது குடி குறைத்துப் பேசப்படும். . 242 எட்டி மரத்து விதையை எந்த மண்ணில் நடினும் தென்னைமர மாகாது. தென்னுட்டில் (யமதிசையில்) பிறந்த வரும் விண்ணுலகம் அடைவதால், மறுவுலக வாழ்வு தன் செயலுக்கு ஏற்பத்தான் அமையும். வடநாட்டிலும் நல்லன. செய்யாத வீணர் மிகப் பலர் உளர். 243 வேப்பிலேக்குள் வைத்துப்பழுக்க வைத்தாலும் வாழைப் பழத்தின் இனிய சுவை சிறிதும் மாருது. அதுபோலவே, பழகும் குழு தீயது என்ருலும். நற்பண்புடையவரது நட்பு, மனம் கெடும் எல்லைக்குச் செல்வதில்லை. 244 அலை வீசும் குளிர்ந்த கடற்கரை நாடனே! கடற்கரையை யடுத்தும் இனிய தண்ணிர் கிடைக்கும்; மலேச்சாரலே யடுத்தும் உப்புத் தன்மை மிக்க உவர்ப்புத் தண்ணிர் கிடைக்கும்; ஆதலால், மக்கள் எனப்படுபவர் தம்தம் இனத் திற்கு ஏற்பமட்டும் இருப்பவரல்லர்; தம்தம் மனத்திற்கு ஏற்பவும் மதிக்கப்படுவர். 245