பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 110 26. அறிவின்மை நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை பண்ணப் பணத்த பெருஞ்செல்வம்;-எண்ணுங் (கால் பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ கண்ண வாத் தக்க கலம், - 251 பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்(து) அல்லல் உழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின் காவின் கிழத்தி உறைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து. 252 'கல்’லென்று தந்தை கழற அதனேயோர் சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்மெல்ல எழுத்தோலே பல்லார்முன் நீட்ட விளியா வழுக்கோலேக் கொண்டு விடும். 253 கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு-மெல்ல இருப்பினும் நாய் இருந் தற்றே; இராஅ(து) உரைப்பினும் காய்குரைத் தற்று. 254 புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக் கல்லாத சொல்லும் கடையெல்லாம்; கற்ற கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருள்மேல் படாஅ விடுபாக் கறிந்து. 255