பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 இன்பவியல் படித்துணர்ந்த நாவன்மையாளர் தமிக்குச் சோர்வு உண்டாகலாம் என்று அஞ்சிக் கண்டபடி பேசமாட்டார். மற்றவரோ கண்டபடி நிரம்பப் பேசுவர். வற்றிய பனையின் ஒலை கலகல என ஒலிக்கும். வற்ருத பசுமையான ஒலைக்கு என்றும் ஒலி (ஓசை) இல்லை. 256 நல்லதை உணராத மாக்களுக்கு அறவழி உணர்த்தில்ை, அது, பன்றிக்குக் கூழ் வார்க்கும் தொட்டியில் இனிய மாம்பழச் சாற்றைப் பிழிந்தாற்போலும்; மற்றும் அது, ம்லைமேல் அடிக்கும் கட்டுத்தறிபோல் சிதைந்து, அவர்தம் ச்ெவிக்குள் சென்று புகாதாகும். . 257 பலநாள் பாலால் கழுவி வெய்யிலில் உலர்த்திலுைம் கரிக்கு வெண்மைத் தன்மை உண்டாகாது. நல்வினை செய்யாத உடம்பிலே கோலினுல் குத்தித் துளைத்துச் செலுத்திலுைம் அறிவு புகாது. 258 தேன் சொரிந்து இனிமையாக மணக்கினும் மலர்மேல் மொய்க்காமல் இழிந்த கழிவுப் பொருள்களை விரும்பி மொய்க்கும் ஈக்களைப்போல இழிந்தவற்றையே தாம் விரும்பும் மனமுடையார்க்கு, தகுந்த பெரியோர் வாயி லிருந்து வரும் இனிமை பொருந்திய தெளிவான பேச்சின் ஆராய்ச்சி முடிவு என்ன பயன் தரும்? 259 கற்றறிந்தவர் கூறும் குற்றமற்ற நுண்ணிய கருத்துக் களைக் கேட்பதை விரும்பாமல் தன்மனம் புறக்கணித்துத் தள்ளுவதால், கீழ்மகன், தன்னைப்போன்ற மற்ருெருவனது முகத்தைப் பார்த்துத்தானும்ஒர்.இழிந்த மேடைப்பேச்சைத் தொடங்கிவிடுவான். 260