பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 118 துன்ப இயல் 28. ஈயாமை கட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால் அட்டது ப்ாத்துண்டல் அட்டுண்டல்;-அட்ட(து) அடைத்திருந் துண்டொழுகும் ஆவதில் - மாக்கட்(கு) அடைக்குமாம் ஆண்டைக் கதவு. 271 எத்துணை யானும் இயைந்த அளவில்ை சிற்றறம் செய்தார் தலைப்படுவர்;-மற்றைப் பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும்’ - - (என்பார் அழிந்தார் பழிகடலத் துள். 272 துய்த்துக் கழியான்; துறவோர்க்கொன் றீகலான்; வைத்துக் கழியும் மடவோனே-வைத்த பொருளும் அவனே நகுமே; உலகத்(து) அருளும் அவனே நகும். - 273 கொடுத்தலும் துய்த்தலும் தேற்ரு இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்(து) உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும். 274 எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும் அறுநீர்ச் சிறுகிணற் றுாறல்பார்த் துண்பர்; மறுமை அறியாதார் ஆக்கத்திற் சான்ருேர் கழிநல் குரவே தலே. 275