பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 துன்பவியல் துன்ப இயல் 28. பிறர்க்குக் கொடுக்காத கருமித் தன்மை நண்பர்க்கும் சரி-நண்பர் அல்லாதவர்க்கும் சரி-தம் மிடம் இருக்கும் அளவுக்குச் சமைத்த உணவைப் பகிர்ந்து அளித்து உண்ணுதலே, உண்மையில் சமைத்து உண் ணும் குடும்பஒழுக்கமாகும்.சமைத்ததைக்கதவைஅடைத்து விட்டு உண்ணும் உருப்படாத மாக்களுக்கு அவ்வுலகக் (மோட்சக்) கதவு அடைத்திருக்குமாம். 271 எவ்வளவாயினும்-தம்மால் முடிந்த அளவு சிறு அற மாயினும் செய்தவர் மேன்மையடைவர். மற்று, பெருஞ் செல்வம் அடைந்தபோதும், பின்பு அறம் செய்வோம் என்று தள்ளிப் போடுபவர் பழி என்னும் கடலுள் ஆழ்ந்து அழிவர். 272 பொருளேத் தானும் நுகர்ந்து செலவழிக்காதவய்ை, துறவியர்க்கும் ஒன்றும் உதவாதவனுய், பொருளை விணே பூட்டிவைத்து ஒழிந்துபோகும் அறிவிலியை நோக்கி, அவன்வைத்துச்சென்ற பொருளும் இகழ்ந்து சிரிக்கும்; உலகில் அருள் என்னும் பண்பும் அவனை எள்ளி நகை யாடும். 273 பிறர்க்கு ஈதலும் தான் நுகர்தலும் அறியாத கருமித் தன்மை மிக்க உள்ளம் உடையவன் பெற்றுள்ள பெரிய செல்வம், வீட்டில் பிறந்த அழகிய பெண்ணை அயலான் மணந்து அனுபவிப்பது போல, உரியதொரு காலத்தில் அயலான் எவலைாவது அனுபவிக்கப்படும். 274 அலை வீசும் நீர் மிக்க பெரிய கடற்கரையை அடுத்து வாழ்ந்தாலும், நீர் அற்ற சிஜிய கிணற்றடியில் ஊறும் சிறிய ஊறல் நீரை எதிர்ப்ார்த்திருந்தே மக்கள் உண்பர். எனவே, மறுவுலகிற்கு உரிய நல்வினையை அறிந்து செய்யாதவரின் செல்வத்தைக் காட்டிலும், உயர்ந்தவரின் மிக்க ஏழமையே மேலானது. 275