பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புரட்சி: திருக்குறள் அறத்துப்பாலில் முதலில் இல்லறவிய லும் அடுத்துத் துறவற வியலும் அமைந்துள்ளன. ஆல்ை, பிறர் அனேவரும் வெளியிட்டுள்ள காலடியார் பதிப்புக்களிலோ, முதலில் துறவற வியலும் அடுத்தே இல்லற வியலும் காணப்படு கின்றன. அடியேன் இந்த அமைப்பினே மாற்றி, திருக்குறளைப் போலவே காலடியாரிலும் முதலா வதாக இல்லற வியலேயும் இ ர ண் டா வ தா. க த் துறவற வியலேயும் அமைத்துள்ளேன். இல்லறத் திற்குப் பின்னே துறவறம் கொள்வதே தமிழரின் தனிமுறை யன்ருே? இருப்பினும், இதனைச் சிலர். இல்லே, பலர் ஏற்கார். அவர்கட்கு இதோ பதில்: காலடியார் நூற்பாடல்களை ஒருவர் எழுதவில்லே; பலர் எழுதினர். பதுமனர் அவற்றை வகைப்படுத் தித் தொகுத்ததாகச் சொல்லப்படுகிருர். எனவே, துறவற வியலே முதலில் அமைத்தது பதுமனரின் கைவரிசையே! அங்ங்னமெனில், இல்லறவியலே நாம் ஏன் முதலில் அமைத்துக் கொள்ளக்கூடாது? மற்றும், ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள பத்துப் பத்துப் பாடல்களும், இந்த (எனது) பதிப்பில் உள்ள வரிசைப்படியே எல்லாராலும் அமைக்கப் படவில்லை; சிலரால் சில பாடல்கள் வரிசைமாற்றி எண் அமைக்கப்பட்டுள்ளன. இதல்ை, காலடி யாரில் பலரும் தம் கைவண்ணம் காட்டியுள்ள னர் என்னும் இமாலயப் பேருண்மை புலகிைறது. எனவே, இந்தப் பதிப்பில் இல்லறவியலே முதலில் அமைத்தது பொருத்தமே என்று தெளியலாம்.