பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 துன்பவியல் 30. மானம் உடைமை செல்வத்தின் வன்துணையால் நல்லதகுதி யில்லாதார் புரியும் செருக்கான செயல்களைக் கண்ட மாத்திரத்திலும், எரியுற்றுக் காட்டைப்பற்றிய நெருப்பைப்போல மானம் உடையவரது உள்ளம் கொதிகொதிக்கும். 291 மானத்தைத் தம் உடைமையாகக் கொண்டவர்,(வறுமை யால் உடல்) எலும்பாகிச் சிதைவதானுலும், நற்பண்பு இல்லாத கயவர் பின்னே சென்று தமது துன்பத்தைக் கூறுவரோ? (கூருர்). தமது துயரை உரைப்பதற்கு முன்பே அவராக உணர்ந்து போக்கும் அறிவுடைய நல்லோரிடம் தாம் அடைந்த துன்பத்தைக் கூருதிருப் பாரோ? (கூறுவர்.). 292 ஏழையராகிய யாங்கள் செல்வர்க்கு விருந்தளித்தால் எம் மனைவியரைக் கொண்டே பரிமாறச் செய்வோம், அச் செல்வர்கள் எமக்கு உணவு அளிப்பின், அவர்தம் மனைவி யரை யாம் கண்டாலேயே கற்பழிந்துவிடும் என்று கருதி யவர்போல மனம் நாணி, எம்மை வெளிவாயிலில் அமர வைத்தே யாரைக் கொண்டாயினும் சோறிடுவர். அதனல் செல்வரது தொடர்பை மறந்திடுவீர்! 293 மிக நன்ருய்க் கத்துரிப் புழுகு மணக்கும் கூந்தலை யுடையவளே! மானம் உடையவரது மாண்பு, இவ்வுலக வாழ்விலும் நன்மைதரும்; ஒழுகவேண்டிய நன்னெறியைக் கைவிடாததால் மறுவுலகத்திலும் நல்லனவே அளிக்கும்; ஆதலின், அது மிக உயர்ந்தது அறிவாயாக! 294 பாவமும் அடுத்துப் பழியும் உண்டாகும்படியான திச் செயல்களை, பெரியோர் உயிர் சாய்ந்து மாய்வதாயினும் செய்யார்; ஏனெனில், சாதல் என்பது, ஒருநாளில்-ஒரு சிறு நேரத்தில் மட்டும் துன்பம் தரும்; அந்தப் பாவமும் பழியும் போல தாங்குதற்கு அரிய் துன்பங்களை என்றும் தருவ தில்லை. - 295