பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 துன்பவியல் வளப்பம் மிக்க பெரிய இவ்வுலகில் வாழும் மாந்தருக்குள் எல்லாம், செல்வம் உடையவராயினும் பிறர்க்கு வழங்காத வர்கள் ஏழைகளே. வறுமையுற்றவிடத்தும் செல்வரிடம் சென்று இரக்காதவ்ர்கள், பெரு முத்தரையர் என்னும் மன்னர் மரபினர்போல் செல்வரேயாவர். 296 பக்க வாட்டத்தில் பரவியுள்ள வில் போன்ற புருவத்தை யும் வேல் போன்ற நீண்ட க்ண்ணையும் உடையவளே! கடைப்பட்டவர்கள் வருத்தும் பசிக்கு அஞ்சி எதையும் செய்வர். மற்றைய இடைப்பட்டவர்கள் மற்ற துன்பங் கட்கு அஞ்சி அதற்காக ஏதும் செய்வர். முதன்மையான பண்பாளரோ, உலகம் சொல்லும் பழிக்கு அஞ்சித் தியன செய்யார், . - இவர் நல்லவர்-பெரிதும் இரக்கமுடையவர் . அதல்ை இப்போது ஏழையாகிவிட்டார் என்று இகழ்ச்சியாகப் பேசிச் செல்வர்கள் நல்லவரைப் பார்க்கும் ஏளனப் பார்வை யைக் காணும் ப்ோது, சிறந்த பெரியோரது உள்ளம், கொல்லனது உலைக்களத்தில் ஊதியெழுப்பும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கக் கூடும்போலும்! 298 தம்மிடம் விரும்பி வந்தவர்க்கு ஒன்று கொடுக்காதது கூட அவ்வளவு பெரிய நாணமன்று; நாள்தோறும் பலவகை அச்சத்தால் நாணுதலுங்கூட மிகப்பெரிய நாணமன்று; ஆல்ை, செல்வக் குறைவில்ை தாம் மெலிந் திருக்க, தம்மினும் மேலானவர் தமக்குச் செய்த உதவியை நன்றியுடன் வெளியில் சொல்லாதிருப்பதே மிகவும் பெரிய நாணமாகும். 299 மதமுடைய யானையை அடித்து வீழ்த்திய-காட்டில் வாழும் வேங்கைப் புலியானது, தன் வலப்பக்கம் வீழாமல் இட்ப்பக்கம் வீழின் அந்த யானையை உண்ணுமல் பட்டினி யால் இறந்து போகும். பெரியோர்களுங்கூட, இடம் அகன்ற விண்ணுலகமே கிடைப்பதாயினும் மானம் கெட்டு வருவதானல் அதனை விரும்பார். ' 300