பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 துன்பவியல் 'எனக்குத் துன்பமே வருக! இன்பம் ஒழிக" என்று எண்ணித் தன் மனத்தைத் தானே நிறைவு (திருப்தி) செய்துகொள்ளத் திர்ந்துபோகக்கூடிய வறுமைக்காக, பொருள் விருப்பத்தால் கவலைப்படும் மனத்துடன் கண் குழிந்து அயலாரிடம் சென்று இரப்பது ஏனே? 306 குன்றின் பரப்பு முழுதும் பொன் கொழித்து அருவி பாய்ந்து ஒடும் மலை நாடனே! இவ்வுலகில் எ ன் று ம் புதியவர் பிறந்துகொண்டே யிருப்பினும், என்றும் (இன்னும்) பிறவாதவன் ஒருவன் உள்ளான் எனில், இரப்பவரை இகழாத மனிதன்தான் அவன். (மற்றவர் எவரும் இரப்பவரை இகழ்கின்றனர்.) 307 வெளியே வறுமை தன் உடலை மெலியச் செய்ய, உள்ளே உள்ள தன் நல்லறிவை நீக்கி நிறுத் தி வி ட் டு, இன்ைெருவனை அடைந்து எனக்கு ஈவாயாக என்று ஒருவன் இரப்பானேயாயின், அவன் தர மறுத்துவிட்டால், அப்போதே இவன் நாணத்தால் மாய்ந்துபோகமாட்டானே? . 308 ஒருவர் மற்ருெருவரை அடைந்து அவர்க்கு ஏற்ப நடந்து காட்டி அவரை வணங்குவதில் வல்லவராய் இருப்பதல்லா மல், (மேலும்,) தன்மை கெட்டு ஏதேனும் உதவி செய்ய மாட்டீரா என்று கேட்கும் இழிவுப் பேச்சைவிட மெல்லத் தான் சென்றுகொண்டிருக்கும் வறுமைப் பாதை துன்பம் தராதே! . 309 ஒருவர் பழைய நட்பு துணையாக முன்பு பழகியமுறையில் வந்து கேட்கும் உரிமையில், தான் ஏதேனும் இயன்ற அளவு செய்யவேண்டும். அவர் உரிமையை ஏற்றுக் கொள்ளாது கைவிடப்பட்டார் எனில், அவரது நெஞ்சைக் க வி ந் து .ெ க ண் டு ஒருவகைத் துன்பத் தி அருமல் சுட்டெரிக்கும். - 310