பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியார் கடவுள் வாழ்த்து வானிடு வில்லின் வரவறியா வாய்மையால் கானிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்துமெம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று. (உரை) வானத்தில் தோன்றி மறையும் இந்திர வில்லைப் போல, எதிரே திடீரென வர இருப்பதைப் பற்றி அறிய முடியாத உண்மைக் காரணத்தால், எமது உள்ளத்தில் எண்ணிய நல்லெண்ணங்கள் நிறைவேறுக’ என்று வேண்டி, கால் (பாதம்) தரையில் படியாத தெய்வத்தை, கம் தலைகள் தரையில் படியும்படி நாம் கீழே விழுந்து வணங்கி இடைவிடாது (தியானிப்போமாக) நினைவு செய்வோமாக ! (குறிப்பு : நாலடியாரின் பல பதிப்புக்களின் முகப்பிலும் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல் காணப்படுகிறது. இது, நானூறு பாடல் களுக்கும் அப்பாற்பட்டது. இதனைப் பின் வந்தவர் எவரேனும் இயற்றியிருக்கவேண்டும்.)