பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147. பகையியல் 35. இழிந்ததன்மை நொய்போன்ற தானியக் கப்பியைப் போதுமானதாகக், காலேயிலேயே தன் வாய் நிறைய உடையவன் ஊட்டி லுைம் குப்பை கிளறுதலை நிறுத்தாத கோழியைப் போல, மிகுந்த பெருமை பொருந்திய நூற்பொருளை எடுத்து விரித்துக் கூறிலுைம், கீழ்மகன் தன் மனம் விரும்பிப் போகிற போக்கிலேயே மிகுதியும் போவான். 341 திட்பமான அறிவு பெற்றுக் குற்றமின்றி வாழும் நல்லோர் இடத்தைக் காலம் தாழ்த்தாது அடைவோம் - வருக என்று அழைத்தால், கீழ்மகன், துங்கலாம் என்று எழுந்து போய்விடுவான்; அல்லாவிடின், வேறு ஏதேனும் ஒரு காரணம் கூறி வர மறுத்துவிடுவான். 342 விளங்கும் அருவிபாயும் நல்ல மலை நாடனே! பெரியோர் இடையிலே தாம் பெருவாழ்வு பெற்ருலும், தம் உயர் பண்பிலிருந்து தவருமல் என்றும் ஒரு சீராகவே ஒழுகுவர். கீழ்மகன் இடையிலே பெருவாழ்வு பெற்றபோதும் தன்து தாழ்ந்த ஒரு போக்கையே பின்பற்ற வல்லவனும். 343 விளங்கும் அருவி ஓடும் நல்ல மலைநாடனே! தமக்குப்பிறர் செய்த நன்றி யொன்று இருக்குமானல் அது தினையளவே யானுலும் அதனைப் பனையளவு பெரிதாகப் பெரியோர் மதிப்பர். நன்றி யுணர்வு இல்லாதார்க்கு என்றும் பனையளவு பெரிய நன்மை செய்யினும் பயன் இல்லை. 344 பொன் கலத்திலே உணவிட்டு ஊட்டிக் காப்பாற்றி லுைம் நாயானது பிறரது எச்சில் சோற்றிற்காக இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும். அத்தன்மை போல, கீழ்மக்களைப் பெரும்ையுடையவராக நடத்திலுைம், அவர்கள் செய்யும் செயல்கள் தாழ்ந்து வேறுபடும். 345