பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 10 இல்லற வியல் 1. பொறையுடைமை கோதை அருவிக் குளிர்வரை நல்நாட! பேதையோ டியாதும் உரையற்க;-பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும்;ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. 1 நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதி;மற்(று)-ஒரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும். - காதலார் சொல்லும் கடும்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொலின் தீதாமோ-ப்ோதெலாம் மாதர் வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்பl ஆவ தறிவார்ப் பெறின். 3 அறிவ தறிந்தடங்கி, அஞ்சுவ தஞ்சி, & உறுவ துலகுவப்பச் செய்து,-பெறுவதல்ை இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. 4 வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்ரு ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ஆற்றும் துணையும் பொறுக்க; பொருயிைன் துாற்ருதே தூர விடல்.