பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 இன்பதுன்பவியல் 3. காமத்துப் பால் இன்ப துன்ப இயல் 38. விலைமாதரின் இழிதகைமை விளக்கின் ஒளியும் விலைமாதரின் தொடர்பும் ஆகிய இரண்டையும் குற்றமற ஆராயின் இரண்டிற்கும் வேறு பாடில்லை. விளக்கின் ஒளியும் எண்ணெய் அற்றபோது அற்றுப் போகும் விலைமாதரின் அன்பும் கைப்பொருள் அற்றபோது அற்றுவிடும். - 371 அழகிய பக்கம் அகன்ற அல்குலேபும் சிறந்த அணி கலனையும் உடைய விலைமகள், இறப்பதானுல் நம்முடன் மலையின் நெடிய உச்சியிலிருந்து வீழ்ந்து இறப்போம் என்று சொன்னுள். ஆனல், நம்மிடம் பொன்-பொருள் தீர்ந்துவிட்டதால், காலிலே வாயுவுநோய் என்று காட்டி அழுது, மலையின் நெடிய உச்சியை ஏறியடையாது பிரிந்துபோய்விட்டாள். - 372 அழகிய இடமுடைய விண்ணுலகில் தேவர்கள் தொழும் செங்கண்ணுடைய இந்திரனே ஆலுைம் ஆகட்டுமே! தம் கையிலிருந்து கொடுக்கும் பொருள் ஒன்றும் இல்லாத வரை, கொய்யும் தளிர் போன்ற மேனியுடைய வேசியர், தம் கையால் ஒரு கும்பிடு போட்டு அனுப்பிவிடுவர். 373 அன்பு இல்லாத மனமும் அழகிய நீலமலர் போலும் கண்களும் உட்ைய வேசியர்க்கு, பொன்-பொருள் இல்லா தவர் நஞ்சு போன்றவராவர். எல்லாரும் காணச் செக்கு ஒட்டிக்கொண்டிருந்தவரும் ஈட்டிய பொருள் மிக உடையவ ரானல், அம்மாதர்க்குச் சர்க்கரை போன்றவராவர். 374 பிடிக்கவரும் பாம்பிற்குப் பாம்பு போன்ற தலைப் பக்கத்தைக் காட்டி, மற்ருெரு பக்கமாகிய வாலே, இனிமை பொருந்திய தெளிந்த நீர் மிக்க தடாகத்தில் உள்ள மீனுக்குக் காட்டக் கூடியதான விலாங்கு மீனைப்போன்ற இரட்டைச் செயலுடைய வேசியரின் தோளே, விலங்கு போன்ற - வெள்ளை யறிவுடைய முடர் தழுவுவர். 375