பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 இல்லறவியல் இல்லற வியல் 1. பொறுமை உடைமை மாலைபோன்று அருவி ஓடும் குளிர்ந்த நல்ல மலை நாடனே அறிவில்லா முடனுடன் ஒன்றும் பேசாதே; பேசில்ை, அந்த அறிவிலி மனம் சிதையப் பேசுவான். ஆதலின், நழுவி நீங்கி விடுதலே நல்லது. 1 நேர்மை யற்ற கீழோர் தன்மையற்ற சொற்களைச் சொன்னவிடத்து, அத்தவறைப் பொறுத்தலே தக்கது மற்றபடி பொருவிடின், பொங்கும் கடல்சூழ் உலகம் புகழாகக் கொள்ளாது; தாழ்வாகவே கருதிவிடும். 2 மலர்களிலெல்லாம் அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற வளம் மிக்க குளிர்ந்த கடல் நாடனே! நன்ருவதை அறியும் நல்லவரை நண்பராகப் பெறின், அந்த அன்புள்ள நண்பர் இடித்துரைக்கும் கடுஞ்சொல், சிரித்துப் பேசி நடிக்கும் பகைவரின் இன்சொல்லினும் திய தாகுமோ? 3 அறியவேண்டியதை அறிந்து, அடங்கி, அஞ்சுவதற்கு அஞ்சி, செய்யத்தக்க நன்மையை உலகம் மகிழச் செய்து, பெற்றதைக் கொண்டு மகிழ்ந்து வாழும் மாண்புடையவர் எப்போதும் துன்பமுற்று வாழ்வதில்லை. 4 மாறுபாடு இன்றி இணைந்து இருவர் நட்புகொண் டிருக்கும்போது, ஒருவனிடம் தெளியாத தீயொழுக்கம் காணப்படின், மற்றவன், பொறுக்கும்வரையும் பொறுப் பாகை; பொறுக்க முடியாமற்போனல், அவனைத் தூற்ருமல் துர விலகிவிடுவானுக. - 5