பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 இன்ப வியல் வள்ளல் தன்மை உண்டயவனிடம் உள்ள உயர்ந்த செல் வம், உள்ளத்தில் நல்லாராய்ச்சி உடையவன் கற்ற நூல் போல் பயன்தரும். நாண முடைய குல மகளிர் பெற் றுள்ள அழகு தேர்ந்த ஆண்மகனது கையில் உள்ள கூரிய வாளைப்போல் குறிப்பிடத்தக்கதாம். 386 எனக்கு நேர் ஒவ்வாத-அழகிய நெற்றியை யுடையபரத் தையரைத் தழுவிய மலையணைய மார்புடைய என் கணவன், நீராடாமல்கூட என்னையும் தழுவ வருகிருன். இதல்ை, இவ் வூர்த் தலைவகிைய என் கணவன், கருங்கொள்ளினையும் செங் கொள்ளினையும் வேறுபாடு அறியாது துணிஅளவு-பதக்கு அளவாக ஒருசேர ஒத்த அளவில் வாங்கியவருன்ை. 387 (எம்.கணவனது பிரிவைச் சொல்லவந்த) பாணனே ! யாம், அவற்கு, உடுக்கையின் பயன்படுத்தப் படாத (அடிக்கப்படாத) இடப்பக்கத்தைப் போல் உள்ளேம்; அதல்ை, தலைவனது பிரிவு பற்றிய கொடிய செய்தியை எம்மிடம் கூருதே கூறுவதானல், மெல்ல அடி வைத்து இவ்விடம் விட்டு நீங்கிப் போய், உடுக்கையின் பயன்படுத் தப்படும் (அடிக்கப்படும்) வலப்பக்கம் போன்ற பரத்தை யர்க்கு உரைப்பாயாக ! 388 . கோரைகளைப் பிடுங்கியதும் தண்ணிர் விளங்குகின்ற குளிர்ந்த வயல் சூழ்ந்த ஊரையுடைய என் கணவன்மேல் ஈ பறக்கவும் பொறுக்காமல் ஒரு காலம் நொந்தவளும் நான்தான். ஆனல், காமத் திப் பொறி பறக்க அணைத்துப் பரத்தையரின் முலையோடு மோதிய - குளிர்ந்த சந்தனச் சாந்து அணிந்த கணவனது மார்பின் அலங்கோலத்தைப் பார்த்து வருந்துபவளும் நான்தான் ! 389 (என் கணவனிடமிருந்து தூது வந்த) பாணனே! இன்று அரும்பு மலர்ந்த மாலை யணிந்த என் தலைவன் எனக்கு அருள் சேய்வான் என என்னிடம் பெரிய பொய் சொல் லாதே அவற்கு யான், கரும்பின் கடைசியிலுள்ள சுவை யற்ற கொழுந்தடை போன்றவள். அதனல், கரும்பின் சுவை மிக்க நடுப்பகுதியைப் போன்ற பரத்தையரிடம் போய்ப் பேசுக. 390