பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 இன்ப வியல் 40. காமத்தின் இயல்பு கூறுதல் - விளங்கும் கடலில் ஓயாமல் அலைமோதுகிற - நீண்ட உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த கடற்கரை நாடனே ! தலைவளுேடு புணராவிடின் உடம்பில் பசலை என்னும் ஒருவகை நிறம் பரவும். ஆல்ை, ஊடல் (சிறு பிணக்கு) கொண்டு சிறிது பிரிந்து வருந்தாவிடினும் காமத்திற்கு இன்பம் இல்லை. எனவே, முதலில் புணர்ந்து பிறகு ஊடுவது ஒருவகைச் சுவையான முறை. 391 தாம் விரும்பும் கணவரது மாலை நிறைந்த அழகிய மார் பைத் தம் முலைகள் பூரிக்கும்படித் தழுவும் வாய்ப்பு இல்லாத பெண்டிர்க்கு, இம் என்னும் ஒலியுடன் மழைபெய்ய மேகம் இடியிடிக்கும் திசைகளெல்லாம், சாப்பறை அடித்தாற் போன்ற துன்பச் சூழ்நிலை உடையதாய்த் தோன்றும் 392 கம்மாளம் முதலிய தொழில் செய்த மக்கள் தொழில் முடித்துக் கருவிகளை உள் எடுத்து வைத்துவிட்ட-மயக்கத் திற்குரிய மாலை நேரத்தில், நல்ல மலர்களை ஆய்ந்தெடுத்து மாலை தொடுத்த தலைவி, கணவரின் துணையில்லாத என் போன்ருர்க்கு இந்த மாலை யாது பயன்தரும் என்று கையி லிருந்த மாலையைக் கீழே எறிந்து கலங்கி யழுதாள் 333 (நம் மனைவி) மறைகின்ற கதிரவனைப் பார்த்து, சிதறிய செங்கோடு பொருந்திய தன் கண்ணில் வழிகின்ற நீரை மெல்லிய விரலால் முறை முறையாக வழித்துத் தெறித்து விம்மியழுது, நாம் பிரிந்துள்ள நாளைத் தன் மெல்லிய விரலால் எண்ணிக் கணக்கிட்டு, ஐயோ! தலையணைமேல் (தலைவைக்காமல்) தோளை ஊன்றிச் சாய்ந்து கிடந்து நம் குற்றங்களை நினைத்துக்கொண்டிருப்பாளோ ? 394 என் காதலியின் கண்ணேக் கயல் மீன் என்று கருதிய தால், சிறிய மீன்கொத்திக் குருவி (கொத்தித்தின்ன) அவள் பின்னே சென்றது ! அம்மாடி! அப்படி அவள் பின்னே சென்றும்-ஊக்கத்தோடு முயன்றும், விளங்கும் அவள் புருவத்தை (குருவியைக் கொல்லும்) வளைந்த வில் என எண்ணி அஞ்சியதால் கொத்தாது ஓடிவிட்டது. 39